உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / நாளைய வாக்காளர்கள் ஆச்சே...!

நாளைய வாக்காளர்கள் ஆச்சே...!

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில், தி.மு.க., சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார் பங்கேற்றார்.நிகழ்ச்சிக்கு படுதாமதமாக வந்த அவர், மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டார். தொடர்ந்து, சைக்கிள் வழங்கி, மாணவர்களுடன் குழு புகைப்படம் எடுத்து, அங்கிருந்த கட்சியினர், ஆசிரியர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது, மதிய உணவு இடைவேளை நேரத்தை கடந்து விட்டதால், கவுன்சிலர் ஒருவர், சுரேஷ்குமார் காதில் ஏதோ கூறினார். உடனே பதறிய அவர், 'உடனே, 'பெல்' அடிக்க சொல்லுங்க. பசங்களுக்கு பசிக்கும்... அப்புறம் நம்மள திட்ட போறாங்க...' என்றார்.இதை பார்த்த ஆசிரியர் ஒருவர், 'பசங்க திட்டுவாங்கன்னு அலறுறாரு... ரொம்ப ஓவரா இருக்கே...' என, முணுமுணுக்க, மற்றொரு ஆசிரியர், 'அலற தான் செய்வார்... இன்றைய மாணவர்கள், நாளைய வாக்காளர்கள் ஆச்சே...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை