உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / நாங்க தான் வரணும்!

நாங்க தான் வரணும்!

கணவர்களை மிரட்டி பணம் பறிக்கும் வகையில்,பெண்களுக்கு ஆதரவாக சட்டங்கள் உள்ளதாகவும்,அவற்றை மறுபரிசீலனை செய்யக் கோரியும், இந்தியஆண்கள் முன்னணி என்ற அமைப்பு சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு எத்தனை பேர் வருவர் என தெரியாததால், 10 போலீசாரை பாதுகாப்பு பணிக்கு நியமித்திருந்தனர். ஆனால், 12 பேர் மட்டுமே ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அவர்களை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட போலீசார், 'நாங்களே 10 பேர் இருக்கோம்; நீங்க வெறும் 12 பேர் தான் வந்திருக்கீங்க...' என, முணுமுணுத்தனர்.இதைக் கேட்ட அமைப்பின் நிர்வாகி ஒருவர்,'அப்படி எல்லாம் சொல்லாதீங்க...நாளைக்கே உங்க மனைவியால் உங்களுக்கு பிரச்னை வந்தாலும், போராட நாங்க தான் வரணும்...' எனக்கூற, போலீசார், 'கப்சிப்' ஆகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஜன 02, 2025 23:19

கூட்டம் குறைவாக வந்ததற்கு காணம், இந்தியஆண்கள் முன்னணி அமைப்பின் கண்டன ஆர்ப்பாட்டம் பெரும்பாலான ஆண்கள் மத்தியில் Reach ஆகவில்லை.


D.Ambujavalli
ஜன 02, 2025 06:24

பேசாமல், போலீசாரும் தங்கள் மனைவிகளால் படும் பாட்டை எண்ணி, போராட்டத்தில் கலந்து கோஷம் போட்டாவது தங்கள் ஆதங்கத்தைத் தீர்த்துக்கொண்டிருக்கலாம் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை