| ADDED : ஜன 24, 2025 10:27 PM
கோவை, காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டலில், தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு நடத்தினார். ஊழியர்களிடம் அவர் பேசுகையில், 'நாம் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் உணவு துாய்மையாகவும், சுவையாகவும் இருப்பது மிக முக்கியம். அதை விட வாடிக்கையாளர்களை இன்முகத்தோடு வரவேற்க வேண்டும்; கனிவாக பேச வேண்டும்.'எப்போதும், எந்த விஷயத்திலும் அலட்சியம் கூடாது. பணியில் திறமையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். மிகுந்த மரியாதையோடு வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ள வேண்டும்' என்றார்.இதை கேட்ட ஊழியர் ஒருவர், 'இவ்வளவு நேரம் அவர் சொல்றதை நாம கேட்டோம்... ஆனா, நாம சொல்றதை அமைச்சர் கேட்பாரா...?' என முணுமுணுக்க, மற்றொரு ஊழியர், 'நம்ம கோரிக்கை எல்லாம் அமைச்சர் காதுல விழவே விழாது...' என புலம்பியபடி நடையை கட்டினார்.