| ADDED : நவ 30, 2024 10:27 PM
கோவை மாவட்டம், வால்பாறை அரசு கல்லுாரி மாணவியர் விடுதியை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். விடுதி வார்டன்மீது, மாணவியர் அடுக்கடுக்காக புகார் தெரிவித்தனர். மாணவியருக்கு சமைத்த உணவை சாப்பிட்டு பார்த்த அமைச்சர், உணவு மோசமாக இருந்ததை கண்டு கோபமடைந்தார்.கல்லுாரி மாணவியரிடம் தன் விசிட்டிங் கார்டை கொடுத்து, 'நீங்கள் தெரிவித்த குறைகள் அனைத்தும்விரைவில் நிவர்த்தி செய்யப்படும். அதன் பிறகும் ஏதாவதுகுறைகள் இருந்தால், என் மொபைல் போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவியுங்கள்' என்றார்.அமைச்சரின் இந்த நடவடிக்கையால் விடுதி வார்டன் அதிர்ச்சியடைய, மாணவியர் மகிழ்ச்சிஅடைந்தனர்.இதை பார்த்த கட்சி நிர்வாகிகள், 'அது சரி... அமைச்சர் போனை எடுப்பாரா, மாட்டாரான்னு நமக்கு தானே தெரியும்...' என, முணுமுணுத்தவாறு நடந்தனர்.