உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  இப்படி போட்டு வாங்கணுமா?

 இப்படி போட்டு வாங்கணுமா?

சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் சமீபத்தில் நடந்தது. இதில், மண்டல அலுவலர் சங்கர், செயற்பொறியாளர் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், ஆறாவது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் திரவியம் பேசுகையில், 'அம்பேத்கர் நகர் குளத்தில், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீரமைப்பு பணிகள் என்னாச்சு?' என கேள்வி எழுப்பினார். அதற்கு, 12வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கவி.கணேசன், 'டெண்டர் எல்லாவற்றையும் ரத்து செய்து விட்டால், எப்படி பணிகள் மேற்கொள்ள முடியும்? நடப்பது, உங்கள் கூட்டணியான த.வெ.க., அரசு தானே... நீங்களே கேட்டு சொல்லுங்கள்' என, கிண்டலாக கூறினார். இதைக் கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'என்ன தான் கூட்டணி மாறினாலும், காங்கிரஸ் கவுன்சிலரை இப்படி போட்டு வாங்கணுமா?' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூலை 23, 2026 19:15

அந்த. கவுன்சிலர், இன்னும். உள்ளாட்சித். தேர்தல். வந்து. த வெ க. பங்கேற்கவில்லை, அதுவரை பதில். கூறும் பொறுப்பு. உண்டு. என்பதையும். மறந்துவிட்டார்