உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு: 'டாஸ்மாக்' நடத்தும் தி.மு.க., அரசு, மகளிருக்கு, 1,000 ரூபாய் வழங்குவது போல், கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய வியாபாரிகள், தங்கள் சட்ட விரோத செயல் குறித்து, காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இருக்க, ரேஷன் கார்டுதாரர்களுக்கு அவ்வப்போது குறிப்பிட்ட தொகையை கொடுத்து, ஊரார் வாயை அடைத்த செயலை பார்த்து, 'என்னே இவர்களது சமூக சேவை' என்று சொல்ல தோன்றுகிறது.திராவிட மாடல் அரசு, சாராய வியாபாரிகளுக்கும் ஒரு முன்மாதிரின்னு சொல்றாரா? அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: சென்னை மருத்துவ கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பேசிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், 'தனியார் மருத்துவமனை மோகம் குறைந்து, அரசு மருத்துவமனை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது' என்றார். கூடுதல் மருத்துவர்களை நியமித்து, மருத்துவர்களுக்கான சலுகைகள் வழங்கினால், மருத்துவர்கள் இன்னும் சிறப்பாக பணியாற்றுவர். மக்களுக்கு நம்பிக்கை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.இவர் சொல்ற மாதிரி, அரசு மருத்துவமனைகள்ல கூட்டம் இன்னும் கட்டுக்கடங்காம போயிட்டா எப்படி சமாளிக்கிறதுன்னு அமைச்சர் யோசிக்கிறாரோ என்னமோ?இந்திய தேசிய லீக் மாநில தலைவர் பஷீர் அகமது அறிக்கை: சமூக நீதியின் தொட்டிலாக திகழும் தமிழகத்தில், அனைத்து சமூக மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு முன் வர வேண்டும். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்கும் அதே வேளையில், மத்திய அரசை கைகாட்டி தப்பிக்காமல், 2008 புள்ளியியல் சட்டத்தை பயன்படுத்தி, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் உத்தரவிட வேண்டும்.என்னத்த சமூக நீதியின் தொட்டில்... கணக்கெடுப்பு விஷயத்துல பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டுற மாதிரி தானே நடந்துக்குறாங்க!தமிழக பா.ஜ., பொதுச்செயலர்ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: 'பார்லிமென்டில் நிழல் பிரதமராக ராகுல் பொறுப்பேற்றுள்ளார்' என, பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார். நிழலுக்கும், நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பதால் தான் பீட்டர் அல்போன்சுக்கு இந்த தேர்தலில் போட்டியிட சீட் தரவில்லை என, தெரியவருகிறது. ராகுல் நிழல் பிரதமரோ, இல்லையோ தெரியாது... ஆனா, காங்., கட்சியின் நிழல் தலைவர் அவர் தான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை