உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழுதலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை பேட்டி: கொரோனாவில் பணியாற்றி உயிரிழந்த டாக்டர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை தரப்படாதது குறித்து, பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு, 'விவேகானந்தனுக்கு இரண்டு மனைவியர்; அவர்கள் குடும்பத்தில் பிரச்னை உள்ளது' என்ற தவறான தகவலை,அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துஉள்ளார். இது எங்களுக்கும், அவரது குடும்பத்திற்கும் பேரதிர்ச்சியாக உள்ளது.

உள்ளார். இது எங்களுக்கும், அவரது குடும்பத்திற்கும் பேரதிர்ச்சியாக உள்ளது.

கொரோனாவில் உயிர் தியாகம் செய்த டாக்டர் விவேகானந்தனின் ஆன்மா, அமைச்சரை மன்னிக்காது! த.மா.கா., துணைத் தலைவர்முனவர்பாட்ஷா பேட்டி: கள்ளக்குறிச்சியில், வி.சி., கட்சி மதுவிலக்கு மாநாடு நடத்திய போது, தமிழகத்தில் மதுவிலக்கு கேட்டு தீர்மானம் நிறைவேற்றாமல், நாடு முழுதும்மதுவிலக்கு அமல்படுத்தும் தீர்மானத்தை நிறைவேற்ற தி.மு.க., கொடுத்த நெருக்கடி தான் காரணம். அதேபோல் அம்பேத்கர் புத்தக வெளியீட்டுவிழாவில், திருமாவளவன் பங்கேற்காமல் தவிர்க்கவும், அக்கட்சி அளித்த நெருக்கடி தான் காரணம்.அரசியலில், 'அ, ஆ' படிக்கும் குழந்தைக்கு கூட இது தெரியும், விடுங்க!தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: 'எங்களின் தன்மானத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது' என, திருமாவளவன் கூறுகிறார். அம்பேத்கர் புத்தக வெளியீட்டுவிழாவில், வி.சி., கட்சி மானம்காற்றில் பறந்து விட்டது. அன்று,திருமாவளவன் தன்னை வளர்த்து கொள்வதற்காக, தலித்சமுதாயத்திற்காக உழைத்து, மறைந்த தலைவர் அம்பேத்கரைஅவமானப்படுத்தினார். இன்று,தலித் அல்லாத மாநில நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவை, 'சஸ்பெண்ட்' செய்து அவமானப்படுத்தி உள்ளார்.ஆதவ் அர்ஜுனா கூட இவ்வளவு,'பீல்' பண்ணியிருக்க மாட்டார்... அவருக்காக, இவர் இப்படி உருகுறாரே!பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்அறிக்கை: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முயன்ற 10,000க்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தி.மு.க., அரசின் துரோகம் மற்றும் அடக்குமுறைக்கு, சட்டசபை தேர்தலில் ஆசிரியர்கள் பாடம் புகட்டுவர்.ஆசிரியர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் அரசு மீது கடுப்புல தான் இருக்காங்க... ஆனால், அந்த ஓட்டுகளை நீங்க வாங்குவீங்களா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ