வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அதன் ஒரு பியூன் என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டு தனது கல்வியறிவை செல்வப் பெருந்தகை வளர்த்திக் கொள்ள வேண்டும்
பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பேட்டி: தமிழகத்தில் நீதிக் கட்சி ஆட்சியில் ஒரு பட்டியலினத்தவர் கூட அமைச்சராக வில்லை. பட்டியல் இனத்தவர் முதன் முதலாக அமைச்சரானது, ராஜாஜி மந்திரி சபையில் தான். கோவில் நுழைவு போராட்டத்திற்கு தலைமையேற்றவர் வைத்தியநாத அய்யர். உதவியாக இருந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். கோவில் நுழைவு சட்டத்தை கொண்டு வந்தவர் ராஜாஜி; அதை எதிர்த்தவர் ஈ.வெ.ராமசாமி.இந்த மாதிரி வரலாற்று உண்மையை சுட்டிக்காட்டிய சீமானை, திராவிடர்களின் விரோதின்னு முத்திரை குத்திட்டாங்க... அவர் வரிசையில உங்களையும் சேர்த்துடுவாங்க பாருங்க!அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பேசிய முதல்வர், தமிழக மாணவ - மாணவியர், தன்னை, 'அப்பா, அப்பா' என்று வாய் நிறைய அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். அதே நேரம், அவரது அப்பா, தலைவர், கருணாநிதி மருத்துவர்களின் ஊதிய உயர்வுக்காக வெளியிட்ட அரசாணைக்கு முதல்வர் தடை போடுவது தான் வருத்தமளிக்கிறது.ஊதியம் கொடுக்கவே காசில்லாத ஆட்சியாளர்கள், ஊதிய உயர்வு அரசாணையை பற்றி எல்லாம் யோசிக்கக்கூட மாட்டாங்க!தமிழக, காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி: முன்னாள் பிரதமர் இந்திரா, தன் ராஜதந்திரத்தால் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தார் என, நான் கூறியதை, தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சித்துஉள்ளார். மனிதர்கள் நடமாட்டம் இல்லாத, 1.75 சதுர கி.மீ., கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டு, 4,000 சதுர கி.மீ., பெற்று, கடல் எல்லையை விரிவுபடுத்தியது ராஜதந்திரம் தான்.'உங்கள் ராஜதந்திரங்கள் எல்லாம் வீணாகி விட்டதே...'ன்னு, 23ம் புலிகேசி படத்துல நடிகர் வடிவேலு சொல்ற மாதிரி தான் மீனவர்களும் சொல்லுவாங்க!தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேட்டி: நம் நாட்டின் எல்லையை திருத்துவதற்கு அரசியலமைப்பின் முதலாவது சட்டப்பிரிவில் திருத்தம் செய்ய வேண்டும். அதை செய்யாமலேயே கச்சத்தீவை கொடுத்துள்ளனர். கச்சத்தீவை கொடுத்ததால், இந்தியாவுக்கு தற்போது வரை ஒன்றும் கிடைக்கவில்லை. கச்சத்தீவை கொடுத்ததற்காக, தி.மு.க.,வும், காங்கிரசும், வீடு வீடாக சென்று மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். கச்சத்தீவை மீட்க பிரதமர் மோடி உறுதுணையாக நிற்பார்.பதினோறு வருஷமா தொடர்ந்து பிரதமரா இருக்கிற மோடி, இதுவரைக்கும் மீட்காத கச்சத்தீவை, இனியும் மீட்பார்னு மீனவர்களை நம்ப சொல்றீங்களா?
அதன் ஒரு பியூன் என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டு தனது கல்வியறிவை செல்வப் பெருந்தகை வளர்த்திக் கொள்ள வேண்டும்