பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 18
எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்கத்தின் தலைவர் கா.லியாகத் அலிகான் அறிக்கை: ‘உலகத் தமிழ் மாநாட்டை மீண்டும் நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்’ என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது. இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை, சென்னையில் அண்ணாதுரை நடத்தினார். ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை, மதுரையில் எம்.ஜி.ஆர்., நடத்தினார். எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டை தஞ்சாவூரில் ஜெயலலிதா நடத்தினார். செம்மொழி மாநாட்டை கோவையில் கருணாநிதி நடத்தினார். உலகத் தமிழ் மாநாட்டை, மீண்டும் முதல்வர் விஜய் நடத்தினால், வரலாற்றில் இடம் பிடிப்பார். அதேநேரம், ‘உலகத் தமிழ் மாநாடு நடத்தாத முதல்வர்கள்’னு ஒரு பட்டியல் போட்டா, அதுல தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தான் முதலிடத்தில் இருப்பாரு! த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக கனிமவளத் துறை அமைச்சர் பிரபு பேட்டி: கடந்த சட்டசபை தேர்தலில், அனைத்து கட்சிகளும் த.வெ.க.,வுக்கு எதிராக நின்றன. முதல்வர் விஜய் தனி ஆளாக, மக்கள் ஆதரவோடு நின்று வெற்றி பெற்றார். ஆனால் இன்று மிகப்பெரிய கூட்டணி கட்சிகள் வந்திருப்பதால், கூடுதல் பலத்தோடு இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவோம். ‘எதிர்க்கட்சிகள் இப்பவே போட்டியில் இருந்து விலகிடலாம்’னு சொல்லாம சொல்றீங்களோ? த.வெ.க., கூட்டணியில் உள்ள, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேட்டி: கடந்த ஐந்து ஆண்டு தி.மு.க., ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சரியாக பராமரிக்கப்பட்டது போல் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, கனிமொழி ஆகியோர் பேசுகின்றனர். கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சி அமைதி பூங்காவாக இல்லை; அப்போதும், 9,000 கொலைகள் நடந்துள்ளன. அப்படி 9,000 கொலைகள் நடந்த தி.மு.க., ஆட்சியை தானே, உங்க கட்சி தலைவர் காதர் மொய்தீன் விழுந்து விழுந்து ஆதரிச்சிட்டு இருந்தாரு! ‘நுாலக ஊழலில் ஈடுபட்டது யாராக இருந்தாலும், அவங்களுக்கு களியும், கம்பியும் காத்துட்டு இருக்கு’ன்னு சொல்றீங்களோ? த.வெ.க., கூட்டணியில் உள்ள காங்கிரசைச் சேர்ந்த, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி:கோவை ஈ.வெ.ரா., நுாலகம் உள்ளிட்ட நுாலக புத்தக கொள்முதல் முறைகேட்டில் தெளிவான ஆதாரங்கள் உள்ளன. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா? கடந்த தி.மு.க., ஆட்சியில் புத்தகங்களை கொள்முதல் செய்தது எப்படி? ‘டெண்டர்’கள் யார் பெயரில், எவ்வளவு ரூபாய்க்கு கொடுக்கப்பட்டன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அதற்கான தண்டனையை கண்டிப்பாக பெற வேண்டும்.