மேலும் செய்திகள்
அரசியல் நடிகர் விஜய்: பா.ஜ., விமர்சனம்
24-Aug-2025
தமிழக, பா.ஜ., மூத்த தலைவரும், நடிகருமான சரத்குமார் பேட்டி: த.வெ.க., மாநாட்டில், அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜய் பேசியதை, 'நோட்' பண்ணி வைத்துள்ளேன். அது குறித்து கள்ளக்குறிச்சியில் நடக்கும் நிகழ்ச்சியில் விலாவாரியாக பேசுவேன். 'பாசிசம்' என, விஜய் கூறி வருகிறார். அது குறித்து அவருக்கு தெரியுமா என்பது எனக்கு தெரியவில்லை. 'மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்' என்று கூறும் அளவிற்கு, அரசியலில் விஜய் வளர்ந்து விடவில்லை. அரசியலில், 50 ஆண்டுகள் அனுபவம் மிக்க முதல்வர் ஸ்டாலினே, பிரதமரை மரியாதையாகவே விமர்சிக்கிறார்... நேத்து முளைத்த விஜய்க்கு வாய் துடுக்கு, 'ஓவர்' தான்! தமிழக, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு: வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு, அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி தான் போட்டி. தாமரை இலையி ல் தண்ணீர் ஒட்ட வேண்டியது இல்லை. தண்ணீரில் அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு, தாமரை மலரப் போகிறது. விஜய் அரசியல் ஞானம் இல்லாமல், 'அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி பொருந்தா கூட்டணி' என பேசுகிறார். முறையாக ஒரு மாநாட்டை நடத்த முடியாத விஜய், எப்படி ஆட்சியை நடத்தப் போகிறார்? ஆட்சி நடத்தும் அளவுக்கு விஜய் கட்சி வெற்றி பெறும் என, அரசியலில், 'சீனியரான' தமிழிசை நம்புறாங்களா என்ன? பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர், ஹெச்.ராஜா பேட்டி: நடிகர் விஜய் பின்னாடி யார் இருந்து அவரை துாண்டுகின்றனர் என்பது தெரியவில்லை. தமிழகத்தில் இருக்கும் ரசிகர்களை பிழிந்து, பணம் சம்பாதித்ததை தவிர, விஜய் தமிழகத்திற்கு என்ன பண்ணி இருக்கிறார்... ஓட்டு கேட்க வே ண்டும் என்றால், முதலில் தமிழக அரசியலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அவர் அனாவசியமாக, பா.ஜ.,வை வசைபாட வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறேன். அதானே... டில்லியில் முதல்வராக இருந்த, பிரபல, அரவிந்த் கெஜ்ரிவாலையே ஓட ஓட விரட்டிய, பா.ஜ.,வுக்கு, விஜய் எல்லாம் எம்மாத்திரம்? தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு பேட்டி: தமிழகத்தின் முதல்வர், பெரிய கட்சியின் தலைவர், 40 ஆண்டு காலம் அரசியலில் உள்ளவரை பற்றி, நேற்று அரசியலுக்கு வந்த விஜய், தரம் தாழ்ந்து விமர்சனம் செய்துள்ளார். நாங்களும் தேர்தலில் தக்க பதில் கொடுப்போம். விஜய் தராதரம் அவ்வளவு தான். ஐம்பது பேர் கூடி விட்டனர் என்பதற்காக, மாநில முதல் வரை எது வேண்டுமானாலும் பேசுவது சரியல்ல. இவங்க கட்சியின் பேச்சாளர்கள், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சைதை சாதிக் எல்லாம் களத்துல இறங்கிட்டா, விஜயை தெறிக்க விட்டிருவாங்களே!
24-Aug-2025