உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

'தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினால் தான், தி.மு.க.,வுடன் கூட்டணி' என்று நாசுக்கா சொல்றாங்களோ?பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பேச்சு: 'நமது கோவில்; நமது தெய்வம்' என்பதை போல், நம் நாட்டு பொருளாதாரமும் முன்னேற வேண்டும். அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு எதிர்ப்பு காட்டும் வகையில், ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதை தவிர்த்து, நம் ஊர் கடைகளில் பொருட்களை வாங்கி, சுதேசி பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும். நல்ல யோசனை தான்... தொட்டதுக்கெல்லாம் மொபைல் போனை எடுத்து, 'ஆர்டர்' செய்வதை விடுத்து, பொடி நடையாக பக்கத்து தெரு கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி பழகணும்!தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி எம்.பி., அறிக்கை: இருள் சூழ்ந்த சமூகத்தில் பகுத்தறிவு பாய்ச்சி, சிந்திக்க கூறிய ஈ.வெ.ரா., படத்தை, உலகின் மதிப்பு மிக்க கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் பிரிட்டன் நாட்டின், லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உலகெங்கிலும், அடக்கு முறைக்கு எதிராக கிளர்ந்தெழும் ஒவ்வொரு சாமானியரின் குரலும், ஈ.வெ.ரா.,வின் குரலாக ஒலிக்கிறது. திசை எட்டும் அவரது சிந்தனைகள் பரவட்டும். 'தமிழ் காட்டுமிராண்டி மொழி, தாலி பெண்களின் அடிமை சின்னம்' என்ற ஈ.வெ.ரா.,வின் சிந்தனைகள், திசை எட்டும் பரவட்டும்னு சொல்றாங்களோ? மா.கம்யூ., கட்சியின் மதுரை எம்.பி., வெங்கடேசன் அறிக்கை: அமெரிக்கா விதித்த கூடுதல் இறக்குமதி வரியின் காரணமாக பல சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையான இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளன. இதன் விளைவாக, வங்கி கடன்களை செலுத்த முடியாமல், அவை வாராக்கடன்களாக மாறும் அபாயமும் உள்ளது. அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மீது கடுமையான எதிர்மறை வி ளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்கா கைவிட்டுட்டா, இந்தியர்கள் அடுத்த வேளை சோறே சாப்பிட முடியாது என்பது போல புலம்புறாரே! தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பேட்டி: தி.மு.க., கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றுகின்றனரா அல்லது புதிய திட்டங்களை செயல்படுத்துகின்றனரா என்பதை, மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். எது எப்படி இருந்தாலும், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் போதுதான், இந்த ஆட்சியை சிறந்த ஆட்சியாக மக்கள் ஏற்றுக்கொள்வர். தே.மு.தி.க., யாரு டன் கூட்டணி வைக்கும் என்பதை, ஜனவரி 9ம் தேதி, கடலுார் மாநாட்டில் அறிவிப்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை