உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி அறிக்கை: கடந்த மூன்று மாதங்களில் நடந்த அனைத்து சட்டசபை நடவடிக்கைகளிலும், ஆளுங்கட்சியினரை சபாநாயகர் பிரபாகர் காப்பாற்றி வருகிறார். அமைச்சர்களும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து தங்களை சீரமைத்து கொள்ளாமல், இன்னும் எவ்வளவு காலம் சபாநாயகரின் நிழலில் காலத்தை ஓட்டப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். என்ன தான் சபாநாயகராக இருந்தாலும், தன்னை அந்த இடத்தில் உட்கார வச்ச ஆளுங்கட்சிக்கு விசுவாசமா தான் இருப்பார்... தி.மு.க., ஆட்சியில் அப்பாவு இருந்தது போல! தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி எம்.பி., அறிக்கை: பிரிட்டன், 'விசா' மற்றும் குடியுரிமை விதிமுறை மாற்றங்களால், அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், 2025 - 26ம் ஆண்டு உயர்கல்விக்கு தேர்வு செய்யப்பட்ட, 300க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்களுக்கு, விசா கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை களையக் கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிபோகாமல் இருக்க, பிரிட்டன் அரசுடன் உடனே பேசி இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அமெரிக்கா போல பிரிட்டன் அரசு கெடுபிடி காட்டாது என்பதால், இவ்விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும்னு நம்பலாம்! இந்திய கம்யூ., தேசிய செயலர் ராமகிருஷ்ண பாண்டே பேச்சு: சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற, ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வைச் சேர்ந்தவர்களின் பெயர்களை கூற முடியுமா? 1929ல் நடந்த காங்., மாநாட்டில், பூரண சுயராஜ்யம் பெற குரல் கொடுத்தவர்கள் கம்யூ., கட்சியினர் தான். கம்யூ., கட்சியினருக்கு யாரும் தேசபக்தியை போதிக்க தேவையில்லை. பா.ஜ.,வை ஆட்சியில் இருந்து அகற்ற, இந்திய கம்யூ., மட்டும் போதாது. இதற்காக அனைத்து இடதுசாரி, மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் ஒன்றுபட வேண்டும். 'பா.ஜ., அரசை வீட்டுக்கு அனுப்பணும்'னு, எல்லா எதிர்க்கட்சிகளும் சேர்ந்து, 'இண்டி' கூட்டணின்னு ஒண்ணை ஆரம்பிச்சீங்களே... அது இன்று, 'லெட்டர் பேடு' அமைப்பா மாறிடுச்சே! வி.சி.க., மாநாட்டு தீர்மானம்: இந்தியாவில் அனைத்து தேசிய இனங்களுக்கும் தன்னாட்சி, தன்னுரிமை, மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளை உறுதி செய்யும் வகையில், மத்தியில் கூட்டாட்சியை உருவாக்க வேண்டும். மாநிலங்களின் உரிமைகளையும், அதிகாரங்களையும் பறிக்கும் போக்கை, மத்திய அரசு நிறுத்த வேண்டும். 'மத்தியில் கூட்டாட்சி' என்ற கொள்கை வந்தால் தான் திருமாவளவன் மத்திய அமைச்சராக முடியும்னு நினைக்கிறாங்களோ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கண்ணன்
ஆக 21, 2026 12:12

மத்தியில் நடப்பது கூட்டாட்சிதான்்என்பதுகூடப் புரியாமல் பேசும் இவர் இதற்காகத்தான் நன்றாகப் படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பது இரண்டாம் உலகப்போர் நடத்தபோது இந்த காம்ரேடுகள் என்ன செய்தனர் என்பது மக்களுக்குத் தெரியும். சுந்த்திரப் மோராட்டத்தைப் பற்றி எங்களுக்கு இப் படிப்பறியாதோர் வகுப்பு எடுக்க வேண்டாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை