உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்ட த.வெ.க., அமைப்பு செயலருமான விஜயபாஸ்கர் பேச்சு: பெண்கள் அனைவரும், 'விஜய் முதல்வராக இருப்பதே எங்களுக்கு பிடித்திருக்கிறது' என, சொல்கின்றனர். த.வெ.க., அரசின் முதல் பட்ஜெட்டில், காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். கோதாவரி திட்டத்திற்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கி, நதிநீர் இணைப்பை முன்னெடுத்திருக்கிறார். அதிகாரத்தால் அல்ல; அக்கறையால் மட்டுமே மக்களை ஈர்க்க முடியும். உலகம் உள்ள வரை விஜயே முதல்வராக தொடர மக்கள் விரும்புகின்றனர். அ.தி.மு.க.,வில் இருந்து சமீபத்தில் தான் ஆளுங்கட்சிக்கு தாவியிருந்தாலும், விஜயை புகழ்வதில் அவரது சொந்த கட்சியினரையே மிஞ்சிடுவார் போலிருக்கே!----- பா.ஜ., தமிழக பொதுச்செயலர் வினோஜ் செல்வம் பேச்சு: மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில், முதலீடு செய்யும் பணத்திற்கு இரண்டே மாதங்களில் இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி, மாபெரும் மோசடி நடந்ததை கண்டு அதிர்ச்சி ஏற்படவில்லை; பரிதாபம் தான் மிஞ்சுகிறது. த.வெ.க., அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து, மோசடியாளர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத் தர வேண்டும். இந்த மாதிரி மோசடிகள் தமிழகம் முழுக்க நடந்து, அவை பற்றி ஊடகங்களில் எத்தனையோ செய்திகள் வந்தாலும், மக்களிடம் பேராசை இருக்கும் வரை, இத்தகைய சம்பவங்கள் தொடரவே செய்யும்! காங்., கட்சியைச் சேர்ந்த, கரூர் எம்.பி., ஜோதிமணி பேட்டி: எந்த அரசும், ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றியதில்லை; அவகாசம் தர வேண்டும். தமிழக சட்டசபை கண்ணியமாக நடத்தப்பட வேண்டும். நாகரிக கலந்துரையாடல் தேவை. மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். சட்டசபை தரம் என்பது வருத்தப்படும்படி உள்ளது; இதை சபா நாயகரே உணர்ந்துள்ளார். சட்டசபை செயல்பாடுகளில் ஆளுங்கட்சியை குறை சொல்றாங்களா; எதிர்க்கட்சியை குறை சொல்றாங்களான்னு கண்டுபிடிக்க முடியாதபடி ஜாக்கிரதையா பேசுறாங்களே!இந்திய கம்யூ., கட்சியின், திருப்பூர் எம்.பி., சுப்பராயன் பேட்டி: இடதுசாரிகளுக்கு எதிரான சுற்றறிக்கை குறித்து, முதல்வர் விஜய் பேசியிருக்க வேண்டும். ஆனால், சுற்றறிக்கை குறித்து இத்தனை பெரிய களேபரம் வெடித்த பின்பும், முதல்வரிடம் இருந்து, 'நடந்தது சரி; தவறு' என எந்த தகவலும் இல்லையே. இது குறித்தெல்லாம் செய்தியாளர்கள் தான், முதல்வரை சந்திக்கும் போது கேட்க வேண்டும். என்ன செய்ய...? முதல்வர் தான் செய்தியாளர்களையே சந்திப்பது இல்லையே. அவர் பேசாம இருந்து, அவரை பத்தி மற்றவங்களை பேச வச்சுட்டே இருக்காரே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை