உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி

வழிகாட்டி பலகை சேதம் நுாறடி சாலை, நடேசன் நகர் அருகில் உள்ள வழிகாட்டி பலகையின் இரும்பு கம்பம் அடியில் துருபிடித்து சேதமாகி, ஆபத்தான நிலையில் உள்ளது. கணேசன், நடேசன் நகர். குடிநீர் சரியாக வருவதில்லை பிள்ளையார்குப்பம், கூனிமுடக்கு மெயின் ரோட்டில் குடி தண்ணீர் சரியாக வராமல் உள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நாகராஜன், பிள்ளையார்குப்பம். தெரு விளக்கு எரியுமா? முத்தியால்பேட்டை, சோலை நகர், தெற்கு செங்கேணி அம்மன் கோவில் தெருவில்,தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. விவேகானந்தன், முத்தியால்பேட்டை. நாய்கள் தொல்லை. உழவர்கரை, ஜவகர் நகர் ஹவுசிங் போர்டு குடியிருப்பில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், பொது மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். ராகவன், உழவர்கரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை