உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புகார் பெட்டி: புதுச்சேரி

புகார் பெட்டி: புதுச்சேரி

மோசமான சாலையால் விபத்து கடலுார் சாலை அரியாங்குப்பம் முதல் தவளக்குப்பம் வரை குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது. கணேஷ், அரியாங்குப்பம். சாலையோரம் குப்பை அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. கணபதி, அரியாங்குப்பம். போக்குவரத்து நெரிசல் அரியாங்குப்பம் – வீராம்பட்டினம் சாலையில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விஜயன், அரியாங்குப்பம். குப்பை வண்டி வருமா? ஊசுடு தொகுதி, ராகவேந்திரா நகர் 3வது குறுக்கு தெருவில் சரியாக குப்பை வண்டி வராமல் உள்ளதால் குப்பை தேங்கி கிடக்கிறது. ஜெயசிம்மன், ஊசுடு. தெரு நாய்கள் தொல்லை ராஜ்பவன் தொகுதி, மணக்குள விநாயகர் கோவில் அருகில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். ஆசியகுமார், ராஜ்பவன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி