புகார் பெட்டி....
குப்பைகளால் சுகாதார சீர்கேடுஇந்திரா நகர் தொகுதி, பானாரப்பேட்டை பகுதியில் குப்பைகள் சாலையில் கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.சதீஷ், இந்திரா நகர்.கழிவுநீர் வாய்க்கால் அடைப்புவில்லியனுார் மேற்கு மாடவீதியில், வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்கிறது.சண்முக சுந்தர், வில்லியனுார்.வாய்க்கால் உடைப்புகருவடிக்குப்பம் கால்நடை மருத்துவமனை வீதியில், சைடு வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது.பாண்டியன், கருவடிக்குப்பம்.குண்டும் குழியுமான சாலைமடுகரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.பாண்டியன், நெட்டப்பாக்கம்.