புகார் பெட்டி..
வாய்க்காலில் அடைப்பு மணவெளி, நேதாஜி நகரில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. மூர்த்தி, அரியாங்குப்பம். போக்குவரத்துக்கு இடையூறு வில்லியனுார் கிழக்கு மாட வீதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. ரஜினிமுருகன், வில்லியனுார். ஜிப்மருக்கு இரவில் பஸ் தேவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவு நேரத்தில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சரவணன், கோரிமேடு.