புகார் பெட்டி புதுச்சேரி
நாய்கள் தொல்லை நெல்லித்தோப்பு, சபரி படையாட்சி வீதியில், தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். செல்வராஜ், நெல்லித்தோப்பு. கொசு தொல்லை லாஸ்பேட்டை, மேற்கு கிருஷ்ணா நகரில், சாலையில் மாடுகளை கட்டி வைத்துள்ளதால், கொசு தொல்லை அதிகமாகி வருகிறது. மலர்வண்ணன், லாஸ்பேட்டை. போக்குவரத்திற்கு இடையூறு வில்லியனுார், கிழக்கு மாட வீதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. ரஜினிமுருகன், வில்லியனுார். ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு, இரவு நேரங்களில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மாலதி, கோரிமேடு.