உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / வீடுகளில் பதுங்கும் அறை உள்ளது!

வீடுகளில் பதுங்கும் அறை உள்ளது!

போர் நடைபெறும் இஸ்ரேல் நாட்டுக்கு சென்று வந்தது பற்றி கூறுகிறார், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரியதர்ஷினி: இஸ்ரேல் அரசு, டில்லியிலுள்ள அதன் துாதரகம் வாயிலாக, இந்தியாவிலிருந்து, ஒன்பது பேர் கொண்ட துாதுக்குழுவை தங்கள் நாட்டிற்கு அழைத்து சென்றது. இந்த பயணத்தின் நோக்கம், அங்குள்ள மக்களின் வாழ்க்கையை புரிந்து கொள்வதாகும். இதற்கான பயணம், ஏப்ரல் 7 - 11-ம் தேதி வரை நடந்தது. போரின் அத்தனை கோர முகங்களையும் நேரடியாக பார்த்து வந்தேன். இஸ்ரேல் மக்களிடம், எதிர்பாராத அதிர்ச்சிகளில் இருந்து தங்களை மீட்டெடுத்து கொள்ளும் திறனைப் பார்க்க முடிந்தது. அங்கு பார்லிமென்டை பார்வையிடவும், பார்லிமென்ட் உறுப்பினர் ஒருவருடன் பேசவும் வாய்ப்பு கிடைத்தது.இஸ்ரேலில் சமூகக் கூட்டங்களாக வாழும் ஓர் அமைப்பு இருக்கிறது. யூதர்கள் மீதான தாக்குதல் என்பது, வரலாற்று காலத்திலிருந்து தொடரும் கதை. நாம் இதையொரு பாடமாக மட்டும் தான் படித்திருப்போம். இதனால், பொதுமக்களும், குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனாலும், தொழில்நுட்பம், புலனாய்வு போன்றவற்றில் இஸ்ரேல் சிறப்பாக செயல்படுவது ஆச்சரியமான விஷயம்.பெரியவர்களுக்கு மரியாதை கொடுங்கள். சுத்தமாக இருங்கள் என்று தானே, நம் இந்திய குழந்தைகளுக்கு சொல்லி வளர்ப்போம்... ஆனால், இஸ்ரேலில் எப்படி தெரியுமா... 'வீட்டில் யாரும் வந்து அப்பா, அம்மாவை சுட்டு விட்டால், சத்தம் போடாதீர்கள்; வீட்டிற்குள் ஒளிந்துகொள்ளுங்கள். உடனே வெளியே வராதீர்கள்; எதிரிகள் உங்களை தாக்கக்கூடும்' என்று சொல்லி வளர்க்கின்றனர். அப்படியென்றால், அவர்களின் வாழும் சூழ்நிலையை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.ஒவ்வொரு வீட்டிலும், 'மமாத்' எனப்படும் பதுங்கு அறை இருக்கிறது. வெளியே பொது இடங்களிலும் இந்த அறை உள்ளது. ஏதேனும் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் தாக்க வரும் போது, அங்கே போய் ஓடி, ஒளிந்துகொள்ள வேண்டும்.யார், எப்போது வேண்டுமானாலும் சாகலாம். நிலையற்ற வாழ்வு. இத்தனைக்கும் நடுவே, 'நாங்கள் குழந்தைகளை பெற்று கொள்வதில்லை' என்று பெருமையுடன் கூறுகின்றனர், இஸ்ரேல் மக்கள்.இத்தனை பிரச்னைகளுக்கு நடுவில் வாழ்வதாலோ என்னவோ, உள்நாட்டு குற்றங்கள் அங்கு அதிகமில்லை. அமைதி ஏற்படுத்தும் முயற்சியில் இந்தியாவின் பங்கு அதிகம்.நம் நாட்டில் பிரிவினை பேசும் மக்களுக்கு, இத்தகைய கொடூரங்களின் விளைவுகள் தெரிவதில்லை. பிரிவினை பேசுபவர்களை, சில தினங்கள் இஸ்ரேலில் தங்க வைக்க வேண்டும். போர் மற்றும் அதன் விளைவுகளை அவர்கள் கண் கூடாக காண வைக்க வேண்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Easwar Moorthy
ஜூன் 29, 2024 07:06

நம் நாட்டில் பிரிவினை பேசும் மக்களுக்கு, இத்தகைய கொடூரங்களின் விளைவுகள் தெரிவதில்லை - நல்ல கருத்து


ராது
ஜூன் 27, 2024 19:15

எதற்கு இஸ்ரேல் - பாகிஸ்தான் ஆக்கிரமித்த இந்திய பகுதிக்கு அனுப்பினாலே போதுமே.


zahirhussain
ஜூன் 26, 2024 13:17

முதலில் உண்மையை தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள் நான் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை மாறாக இருக்க இடம் கொடுத்தவர்களின் மடத்தை பிடுங்கிக்கொண்டு தீவிரவாதி என்று முத்திரை குத்தி தினம், தினம் கொன்று குவித்தால் அம்மக்கள் என்னதான் செய்வார்கள்


zahirhussain
ஜூன் 26, 2024 10:17

இஸ்ரேலுக்கு சென்ற அம்மணி ஏன் பாலஸ்தீனத்திற்கு சென்று அங்குள்ள மக்கள் படும் கஷ்டத்தை தெரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை? அடைக்கலம் கொடுத்த மக்களை கொன்று குவிக்கும் அரக்கர்களை சார்ந்த அம்மணி இப்படித்தான் விளக்கம் தெரிவிப்பார் மனிதாபமே இல்லாமல் இருப்பதுதான் பிரச்சினை


Neutrallite
ஜூன் 26, 2024 11:16

மதம் தான் பெருசு எப்பயும். யாரு முதல்ல தாக்குதல் பண்ணது? அப்பயும் மதத்துக்காக வாய்மூடி தானே இருந்தீங்க?


JeevaKiran
ஜூன் 24, 2024 13:00

முதலில் நம் ஊர் எல்லா அ. வியாதிகளை அங்கு ஒரு மாசம் அனுப்பிவைக்கணும்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை