மேலும் செய்திகள்
'உதய்' பேர சொல்லி மிரட்டுறாங்க கண்ணு!
19-Aug-2025
'வளைகாப்பு' என்ற பெயரில் தன் கணவருடன் இணைந்து, கலவை சாதம் தயாரித்து, விற்பனை செய்து வரும், திண்டுக்கல் மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த, யோகா - இயற்கை மருத்துவரான பிரியதர்ஷினி: 'ஆ ட்டிசம்' எனும் மன இறுக்க நோய்க்கு சிகிச்சை அளிக்கும் பயிற்சியாளராக, சென்னை மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்தேன். கொரோனா ஊரடங்கு சமயத்தில், குடும்பத்துடன் ஊருக்கு வந் து விட்டோம். அந்த சமயத்தில் தினமும், 15 பேருக்கு உணவு கொடுக்க ஆரம்பித்தோம். ஏதோ எங்களால் முடிந்த, புளி சாதம், தக்காளி சாதம் என, தினமும் கலவை சாதம் செய்து வழங்கினோம். ஒரு கட்டத்தில், இதையே பிசினசாக செய்யலாமா என்றும் யோசனை வந்தது. திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே, 'வளைகாப்பு' என்ற பெயரில் உணவகம் திறந்தோம். வளைகாப்பு அரங்கம் போலவே அலங்கரித்தோம். வளைகாப்பில் பரிமாறப்படும் உணவு வகைகளான, கலவை சாதங்கள் தான் இங்கு வழங்கப்படுகின்றன. வளைகாப்பு என்று பெயர் வைத்துவிட்டு, கர்ப்பிணியருக்கு முன்னுரிமை கொடுக்காமல் இருந்தால் எப்படி? அதனால், அவர்களுக்கு இங்கு பாதி விலை தான். பொதுவாக, ஹோட்டல் என்றாலே, 'பிரிஜ்' இருக்கும். ஆனால், எங்களிடம் அது கிடையாது. எல்லா காய்கறிகளையும் தினமும் மார்க்கெட்டில் தரமாகவும், புதிதாகவும் வாங்கி சமைக்கிறோம். செயற்கை நிறமூட்டிகளோ, சுவையூட்டிகளோ, மணமூட்டிகளோ சேர்ப்பதில்லை. ஏனெனில், சுவை மட்டுமல்ல, தரமும் எங்களுக்கு முக்கியம். வளைகாப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டரின்படி சமைத்து தருகி றோம். காலை, 9:00 முதல் மாலை 4:00 மணி வரை, 'எப்போது சென்றாலும் அங்கு கலவை சாதம் கிடைக்கும்' என்று, வாடிக்கையாளர்களிடம் பெயர் வாங்கி உள்ளோம். என் மாமியார் தான் இங்கு தலைமை சமையல்காரர். ஒருவராகவே இருந்து சமையலறையை கவனித்து கொள்வார். பெண்களை மட்டும் பணிக்கு எடுக்கிறோம்; ஆறு பேர் பணிபுரிகின்றனர். பக்கத்தில், 'டாஸ்மாக்' கடை இருப்பதால், இக்கட்டான சூழல்கள் ஏற்பட்டால், அதை சமாளிக்க ஒரு ஆண் பணியில் இருக்கிறார். த ரம், அளவு, விலை இந்த மூன்றும் தான் எங்களுக்கு பிளஸ் பாயின்ட். 'பெண்களால் ஹோட்டல் தொழிலை எல்லாம் சமாளிக்க முடியாது'ன்னு ஆரம்பத்தில் பயமுறுத்தினர். ஆனால், ஆரம்பித்த ஒன்பது மாதங்களிலேயே பிசினஸ் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. கலவை சாதம் எங்களை கைவிடவில்லை.
19-Aug-2025