| ADDED : செப் 15, 2011 10:03 PM
'பெண்களேசரியா டிரைவ்பண்றீங்களா?'டிரைவிங் நிறுவன ஒருங்கிணைப்பாளர் யூஜின்: ஆண்களுக்கு நிகரா வாகனம் ஓட்டும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல, விபத்தில் சிக்கும் அல்லது விபத்துக்கு காரணமாகும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது வருத்தமான எதார்த்தம். பெண்கள், பாதுகாப்பு விதிகளை தெரிந்து ஓட்டுவது முக்கியம். எந்தச் சூழ்நிலையில் எப்படி வேகத்தை குறைத்து, எப்படி நிறுத்த வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.ஆணாயிருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், சாலையில் தன்னை யாரும், 'ஓவர்டேக்' பண்ணிடக் கூடாது என்ற எண்ணம், யாருக்குமே இருக்கக் கூடாது.
விட்டுக் கொடுப்பதும் ஒரு நாகரிமான சாலை விதிதான்.பெரும்பாலான பெண்கள் ஹெல்மெட் போடாமல், முகத்திற்கு மாஸ்க் மட்டும் போட்டுக்கொள்வது மிகவும் ஆபத்தானது. வாகன நெருக்கடியில், ஒரு டூவீலர் மற்றொரு வண்டிக்கு மிக அருகில் நிற்பதும், கடப்பதும் தவிர்க்க முடியாதது. சிக்னல்களில் யாராவது ஒரு ஆண் தனக்கு நெருக்கமாக வண்டியை நிறுத்தி விட்டால் அவரைத் தப்பாய் நினைத்து பதட்டமாவது, அதீத வேகத்தில் போவது போன்ற தவறுகளைத் தவிர்க்க வேண்டும்.எல்லாப் பெண்களும், தங்கள் வண்டியின் எல்லா விஷயத்தைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். திடீர் என வண்டி பஞ்சராயிட்டா, ஸ்டெப்னி மாற்றுவது வரை கூட அறிந்திருப்பது நல்லது. வண்டி ஓட்டும் போது சேலையை விட சுடிதார் சிறந்தது. ஆனால், துப்பட்டாவை பாதுகாப்பாக பின் பண்ணிக்கனும். ரெம்ப முக்கியமான விஷயம், லைசென்ஸ் வாங்காமல் வண்டியை தொடக் கூடாது.