செங்கல்பட்டு :புகார் பெட்டி;கீழக்கரணையில் கொசுத்தொல்லை
கீழக்கரணையில் கொசுத்தொல்லை
மறைமலை நகர் நகராட்சி, 17வது வார்டில் உள்ள பள்ளிக்கூட தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் இரவு நேரங்களில் நாளுக்கு நாள் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது.முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இரவும் துாங்க முடியாமல், தவித்து வருகின்றனர். எனவே, நகராட்சி சார்பில் முறையாக தினமும் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ப.சீனிவாசன்,மறைமலை நகர்.