/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / புகார் பெட்டி ; குப்பை கிடங்காக மாறும் வண்டலுார் மேம்பால அடிப்பகுதி
புகார் பெட்டி ; குப்பை கிடங்காக மாறும் வண்டலுார் மேம்பால அடிப்பகுதி
ஜி.எஸ்.டி., சாலையிலிருந்து காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார் செல்ல, வண்டலுார் ரயில்நிலையம் அருகே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடிப்பகுதியில், யாரும் செல்ல முடியாதபடி, 3 அடி உயரத்தில், சுற்றிலும் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது.இந்த இரும்பு தடுப்புக்குள், 5,000 சதுர அடி பரப்பில், மெல்ல மெல்ல குப்பை சேர்ந்து, தற்போது, 'மினி' குப்பை மேடு உருவாகி வருகிறது. இதனால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.இரும்பு தடுப்பு உள்ளதால், ஊராட்சி துாய்மை பணியாளர்களும் உள்ளே சென்று, குப்பையை சேகரித்து அப்புறப்படுத்த வழியில்லை. எனவே, உள்ளே சென்று குப்பையை சேகரித்து அப்புறப்படுத்த, நுழைவு வாயில் அமைக்க வேண்டும்.இல்லாவிட்டால், இரும்பு தடுப்புகளை முற்றிலுமாக நீக்க வேண்டும்.- எம்.ரபீக் அகமது,வண்டலுார்.