உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / புகார் பெட்டி: பவுஞ்சூரில் சிமென்ட் சாலை புதிதாக அமைக்கப்படுமா?

புகார் பெட்டி: பவுஞ்சூரில் சிமென்ட் சாலை புதிதாக அமைக்கப்படுமா?

பவுஞ்சூரில் சிமென்ட் சாலைபுதிதாக அமைக்கப்படுமா?பவுஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கடா நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து உள்ளதால், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.மேலும், மழைக் காலத்தில் சாலை நடுவே தண்ணீர் தேங்குவதால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, வெங்கடா நகர் பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சி.சுந்தர், செய்யூர்.

கழிப்பறைகள் மோசம்

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள், மாணவர்கள் பயன்படுத்த முடியாதபடி, சுகாதாரமற்ற நிலையில் படுமோசமாக உள்ளன. இதனால், மாணவர்களுக்கு நோய் தொற்றும் அபாயம் நிலவுகிறது. எனவே, அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை சீரமைத்து, மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படாதவாறு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கே.கருணாகரன், திருக்கழுக்குன்றம்.

சாய்ந்துள்ள 'சிசிடிவி' கேமரா

கம்பம் சீரமைக்கப்படுமா?திருப்போரூர் ரவுண்டானா சந்திப்பு பகுதியில், காவல் துறை சார்பில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு உள்ளது.சில நாட்களுக்கு முன் வாகனங்கள் அவ்வழியாக திரும்பிச் சென்ற போது, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்த கம்பத்தில் மோதி, சேதமடைந்தது.இதனால், கம்பம் சாய்ந்து காணப்படுகிறது. சாய்ந்துள்ள கம்பத்தை சீரமைத்து, கண்காணிப்பு கேமரா முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கே.கிருஷ்ணா,திருப்போரூர்.

வண்டலுாரில் சிக்னல் பழுது

வாகன ஓட்டிகள் பரிதவிப்புகாட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சியில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அருகில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. இந்த சிக்னல் கடந்த சில மாதங்களாக செயல்படவில்லை. இதனால், இந்த சிக்னலில் நின்று செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையைக் கடந்து செல்லும் பாதசாரிகள், மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே, சிக்னலை பழுது நீக்கி, வாகன ஓட்டிகள் சிரமம் இல்லாமல் பயணிக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எஸ்.டேவிட், வண்டலுார்.

உடைந்த மின்கம்பத்தால் திருப்போரூரில் இடையூறு

திருப்போரூர் வட்டத்தில், கடந்த நவ., மாதம் 'பெஞ்சல்' புயல் வீசியதில் விவசாய நிலம், சாலைகள் உட்பட பல்வேறு இடங்களில் இருந்த, 100க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. அதன் பின், உடைந்த மின்கம்பங்களை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்தனர்.இதேபோல், திருப்போரூர் பேரூராட்சி, ஏழாவது வார்டில் உள்ள சுப்ராயல் நகர், நல்லான் செட்டி குளக்கரையில் இருந்த மின் கம்பங்கள் உடைந்து கீழே விழுந்துள்ளன.இதை இன்னும் மாற்றவில்லை. இது அவ்வழியாக நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு இடையூறாக உள்ளது.எனவே, இந்த உடைந்த கம்பங்களை மாற்றி விட்டு, புதிய மின்கம்பங்கள் நட வேண்டும்.- கு.வர்ஷா, திருப்போரூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை