புகார் பெட்டி சாலையோரம் குவிந்துள்ள குப்பையால் சீர்கேடு
அச்சிறுபாக்கம் அருகே பள்ளிப்பேட்டை ஊராட்சி, பிள்ளையார் கோவில் தெரு செல்லும் சாலை அருகே, பிளாஸ்டிக் குப்பை மற்றும் ஹோட்டல் உணவுக் கழிவுகள் குவிக்கப்பட்டு உள்ளன.இந்த குப்பையை அப்பகுதியில் உள்ள நாய்கள் மற்றும் கால்நடைகள் கிளறுவதால், துர்நாற்றம் வீசுகிறது.தற்போது பெய்து வரும் கோடை மழையில் குப்பை நனைந்து, சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.குப்பை கழிவுகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ச.நரேஷ்,மதுராந்தகம்.