உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / சென்னை / புகார் பெட்டி//

புகார் பெட்டி//

பெருங்களத்துார் பூங்கா பராமரிப்பின்றி சீரழிவு

தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலம், பெருங்களத்துாரில், அறிஞர் அண்ணா நுாற்றாண்டு நிறைவு விழா பூங்கா உள்ளது.பெரிய பூங்காவான இதை, மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. இதனால், மாட்டு தொழுவமாக மாறிவிட்டது.ஏகப்பட்ட மாடுகள் சுற்றித்திரிகின்றன. பூங்காவினுள் உள்ள குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் துருபிடித்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.அதேபோல், யோகா மையம், பூச்செடி, இருக்கை போன்ற எந்த வசதிகளும் இல்லை. நடைபாதை மட்டுமே நன்றாக உள்ளதால், தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில், ஏகப்பட்ட பேர் வாக்கிங் செல்கின்றனர். மின் விளக்கும் இல்லை.இன்னும் பல வசதிகளை ஏற்படுத்தினால், பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதனால், அனைத்து வசதிகளுடன் இப்பூங்காவை மேம்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ