பஸ் ஸ்டாண்டில் துர்நாற்றம்; நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?
நீரோடை அருகே குப்பை பொள்ளாச்சி, சோமந்துறைசித்தூர் ரோட்டோரத்தில், நீரோடை அருகே அதிகளவில் பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பை குவிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் நீர் மாசுபடுவதுடன், பொதுச்சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் இதை கவனித்து உடனடியாக இப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். - சுந்தர், பொள்ளாச்சி.குப்பையை அகற்றணும்! கோபாலபுரம் பகுதியில் ரோட்டோரம் அதிகளவில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அவ்வழியில் செல்லும் மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ரோட்டோர குப்பையை உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும். -- வேல், பொள்ளாச்சி.போக்குவரத்து நெரிசல் பொள்ளாச்சி கடைவீதியில், மாரியம்மன் கோவிலை ஒட்டிய ரோடு ஏற்கனவே குறுகலாக உள்ள நிலையில், அவ்வப்போது கார்கள் 'பார்க்கிங்' செய்யப்படுவதால் நெரிசல் அதிகரிக்கிறது. இதனால், அவ்வழியில் செல்லும் மற்ற வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. இதை தவிர்க்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். -- அலெக்ஸ், பொள்ளாச்சி.பஸ் ஸ்டாண்டில் துர்நாற்றம் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், கோவை செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில், திறந்தவெளியில் பயணியர் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. பஸ்களில் காத்திருப்போர் சிரமப்படுகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் சார்பில் பஸ் ஸ்டாண்டில் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும். திறந்தவெளியை நாசம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். -- மனோ, பொள்ளாச்சி.ரோட்டை சரிசெய்யுங்க உடுமலை நகராட்சி வாசவி நகர் பூங்கா அருகே உள்ள வீதியில், பல ஆண்டுகளாக ரோடு போடப்படாமல் உள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இந்த ரோட்டை சரிசெய்ய நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராமன், உடுமலை.கால்வாய் துார்வாரணும் உடுமலை, திருப்பூர் ரோடு பிரிவில் சாக்கடை கால்வாய் துார்வாரப்படாமல் உள்ளது. குப்பைக்கழிவுகள் சாக்கடை கால்வாயில் முழுவதும் தேங்கி நிற்பதால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் குவிந்து நிற்கிறது. அப்பகுதியில் மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஆர்.ரவி, உடுமலை.வாகன ஓட்டுனர்கள் பாதிப்பு உடுமலை ராஜேந்திரா வீதி, கல்பனா ரோடு சந்திப்பு அருகே மழைநீர் வடிகால் அமைப்பதற்கு குழி தோண்டப்பட்டு பணிகளும் நிறைவடைந்துள்ளது. ஆனால் ரோடு மோசமாகியுள்ளது. வடிகால் அமைக்கப்பட்ட பகுதி மட்டுமே் மேடும் பள்ளமுமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி அப்பகுதியில் விபத்துக்குள்ளாகின்றனர். - செல்வகுமார், உடுமலை.நிழற்கூரை அமைக்கணும் உடுமலை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பகுதியில், நிழற்கூரை வசதி இல்லாததால், பஸ்சுக்கு காத்திருக்கம் பயணியர் வெயிலில் காத்திருக்க வேண்டியதுள்ளது. எனவே, அங்கு நிழற்கூரை அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - முருகன், உடுமலை.இருளில் ஜீவாநகர் உடுமலை, ஜீவா நகரில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. மாலை நேரங்களில் பொதுமக்கள் வெளியில் சென்று வருவதற்கு பாதுகாப்பில்லாத சூழலாக வீதி இருள் சூழ்ந்துள்ளது. இதனால் திருட்டு பயமும் அப்பகுதியில் அதிகரிக்கிறது. மக்களின் பாதுகாப்பிற்காக தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும். - தேவிஸ்ரீ, உடுமலை.சுகாதாரம் பாதிப்பு உடுமலை பசுபதி வீதியில் குப்பைக்கழிவுகள் குடியிருப்புகளின் அருகில் கொட்டப்படுகின்றன. அப்பகுதியில் சுகாதாரம் முழுவதும் பாதிக்கப்படுகிறது. கழிவுகளால் மிகுதியான துர்நாற்றமும் வீசுகிறது. கழிவுகளில் மழைநீர் தேங்கி நோய்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. - ராஜேஸ்வரி, உடுமலை.பிரதான ரோடு சேதம் பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் ரவுண்டானாவில் வேகத்தடை அருகே ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம் அடைகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் இதை கவனித்து ரோட்டில் தரமாக 'பேட்ச் ஒர்க்' பணி மேற்கொள்ள வேண்டும். --- சந்தோஷ், பொள்ளாச்சி.