புகார் பெட்டி கடலுார்
பக்தர்கள் பாதிப்புவிருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வாசலில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.-வெங்கடேசன், நெய்வேலி.பூட்டிக்கிடக்கும் நுாலகம்வேப்பூர் தாலுகா அலுவலகம் அருகே பூட்டிக்கிடக்கும் கிராம நுாலகத்தை இளைஞர்கள் நலன் கருதி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சிவக்குமார், வேப்பூர்.ஹைமாஸ் பழுது நீக்கப்படுமாவேப்பூர் கூட்டுரோட்டிலுள்ள உயர்கோபுர மின் விளக்கு பல ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்து பயன்பாடின்றி உள்ளது. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-குணா, வேப்பூர்.