உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திண்டுக்கல் / பயன்பாடற்ற சுகாதார வளாகத்தால் ரூ. பல லட்சம் வீணடிப்பு

பயன்பாடற்ற சுகாதார வளாகத்தால் ரூ. பல லட்சம் வீணடிப்பு

மரத்தால் காத்திருக்கு ஆபத்து திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனி ரோட்டில் பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம் உள்ளது . போக்குவரத்து அதிகம் உள்ள இப்பகுதியில் மரம் உள்ளதால் விபரீதம் ஏற்படும் இதனை அகற்ற துறை அதிகாரிகள் முன் வர வேண்டும். குமார், திண்டுக்கல்..........-------- பயனற்ற சுகாதார வளாகம் அய்யலுார் மணியக்காரன் பட்டியில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் பயன்பாடின்றி கிடக்கிறது. பயன்பாட்டிற்கு கொண்டுவர தகுந்த ஏற்பாடுகளை பேரூராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும். -- தங்கவேல், அய்யலுார். ..........--------மின் விளக்குகள் எரியாததால் இருள் பழநி- திண்டுக்கல் ரோடு ஹவுசிங் போர்டு பஸ் ஸ்டாப் அருகே ரோட்டில் மின் விளக்குகள் எரியாததால் இரவில் இருள் மூழ்கி உள்ளது . பொதுமக்கள் அச்சத்துடன் செல்வதோடு எதிரே வரும் வாகனங்கள் தெரியாது விபத்து நடக்கிறது. லோகேஷ், பழநி. ..........-------- ரோடு சேதத்தால் பள்ளம் பழநி -திண்டுக்கல் ரோடு மயில் ரவுண்டானா அருகில் ரோடு சேதமடைந்து பள்ளங்களாக உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். சிலர் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர் . பள்ளத்தை சரி செய்ய வேண்டும். முகமது ஜின்னா, மானுார் . ........--------சாக்கடையை துார்வாருங்க பழநி பஸ் ஸ்டாண்ட் அருகே காந்திரோட்டில் சாக்கடையை துார்வார தோண்டப்பட்டு அப்படியே விடப்பட்டுள்ளது .குப்பை தேங்கி நிற்பதால் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது. இதை மூட வேண்டும். விக்னேஷ், பழநி. .............--------சுவரில் உரசும் மின் ஒயர் திண்டுக்கல் ரவுண்ட் ரோடு புதுார் ராஜீவ் காந்தி தெருவில் மின் கம்பிகள் வீட்டின் சுவரில் உரசுவதால் விபத்து அபாயம் உள்ளது .காற்றடிக்கும் நேரங்களில் தீ பறவுகிறது .மின்கம்பமும் சாய்ந்த நிலையில் உள்ளதால் ஒயர்களை சரி செய்ய வேண்டும். குமாரசாமி,ரவுண்ட் ரோடு . ........-------- அள்ளப்படாத குப்பை வத்தலக்குண்டு பேரூராட்சி கடைவீதி தெருவில் குப்பை கொட்டப்பட்டு அள்ளாமல் உள்ளதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது.தெருவை கடந்து செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர் .அ.சந்திரசேகர், மாரம்பாடி . ...............--------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ