புகார் பெட்டி....
சுங்கச்சாவடியில் விபத்து அபாயம்
உளுந்துார்பேட்டை சுங்கச்சாவடி அருகே நகருக்குள் செல்லும் சாலை மூடப்பட்டதால் விபத்து அபாயம் உள்ளது.-தேன் தமிழ், உளுந்துார்பேட்டை. கரடு முரடான சாலையால் அவதி
திருநாவலுார் அடுத்த நத்தாமூர்- அத்தியூர் செல்லும் சாலை கரடு முரடாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.-ஆறுமுகம், நத்தாமூர். சாலையோரம் குப்பை எரிப்பு
கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பகுதியில் சாலையோரம் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிப்பதால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.- பாபு, தச்சூர். பாலத்தில் குப்பைகள்
சின்னசேலம் அடுத்த கனியாமூர் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள உயர்மட்ட பாலத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.-தேவநாதன், கனியாமூர். ஏரி ஆக்கிரமிப்பு
கள்ளக்குறிச்சி சித்தேரி ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அய்யாசாமி, கள்ளக்குறிச்சி. பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா
கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., நகர் பஸ் நிறுத்தத்தில் சேதமான பயணிகள் நிழற்குடை இருக்கைகளை சீரமைக்க வேண்டும்.-முத்துகுமார், கள்ளக்குறிச்சி.