உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கள்ளக்குறிச்சி / புகார் பெட்டி  கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி  கள்ளக்குறிச்சி

ஆபத்தான வாய்க்கால்

கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., நகர் சாலையோர கழிவுநீர் கால்வாய்கள் பாதுகாப்பு தடுப்புகளும் இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது.-ஆனந்தகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி.

குறுகலான சாலை

கள்ளக்குறிச்சி துருகம் சாலை ஆக்கிரமிப்புகளால் குறுகி வாகனங்கள் சரிவர செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. -காமராஜ், கள்ளக்குறிச்சி.

குதிரைகளால் அச்சுறுத்தல்

திருக்கோவிலுார் நகராட்சி சந்தைப்பேட்டையில் சுற்றித்திரியும் குதிரைகளால் பொதுமக்கள் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அதனை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.-முருகேசன், சந்தைப்பேட்டை.

வாய்க்கால் சீரமைக்கப்படுமா

திருக்கோவிலுாரில் கழிவுநீர் தேங்கி நிற்கும் சித்தேரியான் வாய்க்காலை துார்வரி சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கண்ணன், திருக்கோவிலுார்.

விதிமீறும் ஆட்டோக்கள்

சங்கராபுரம் நகரில் அதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு வேகமாக செல்லும் ஆட்டோக்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. -சங்கரசுப்ரமணி, சங்கராபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !