உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

குப்பைகள் அள்ளுவதில்லை கள்ளக்குறிச்சி புதுவீட்டு சந்தில் சரியாக குப்பை அள்ளப்படுவதில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. -பிரேம், கள்ளக்குறிச்சி. சாலையோர ஆக்கிரமிப்பு மேல்சிறுவளுர் கூட்ரோடு பகுதி கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் ஆக்கிரமிப்புகள் நிறைந்து இருப்பதால் போக்குவரத்து பாதிப்படைந்து வருகிறது. -அரசு, மேல்சிறுவளூர். எச்சரிக்கை பலகை தேவை கடுவனுார் ஏரிக்கரை சாலையில் சிறுபாலங்கள் அமைக்கப்படும் இடத்தில் எச்சரிக்கை பலகைகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். -மணிகண்டன், கடுவனுார். போக்குவரத்து பாதிப்பு கள்ளக்குறிச்சி மணிக்கூண்டு சந்து பகுதி சேலம் சாலையில் ஆட்டோக்காரர்கள் சாலையை அடைத்துக்கொண்டு சீட் ஏற்றுவதை போலீசார் கண்டுகொள்வதில்லை .இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. -மணிகண்டன், கள்ளக்குறிச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ