உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சி புகார் பெட்டி: சாய்ந்த நிலையில் வழிகாட்டி பலகை நெடுஞ்சாலை துறை சீரமைக்குமா?

காஞ்சி புகார் பெட்டி: சாய்ந்த நிலையில் வழிகாட்டி பலகை நெடுஞ்சாலை துறை சீரமைக்குமா?

காஞ்சிபுரம் மேட்டுத்தெருவில், வாகன ஓட்டிகளின் வசதிக்காக, வந்தவாசி, செய்யாறு, உத்திரமேரூர், மேல்மருவத்துார் ஆகிய இடங்களுக்கு எந்த திசையில் செல்ல வேண்டும் என, நெடுஞ்சாலைத் துறை சார்பில் வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டுள்ளது.இப்பலகையை தாங்கி பிடிக்கும் இரும்பு சட்டத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால், வழிகாட்டி பலகை சாய்ந்த நிலையில் உள்ளது.இந்த பலகை முழுதும் சாய்ந்து விழுந்தால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, சாய்ந்த நிலையில் உள்ள வழிகாட்டி பெயர் பலகையை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பி.எஸ்.சுந்தரமூர்த்தி, காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை