காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையோரம் குவியும் தொழிற்சாலை கழிவு
சாலையோரம் குவியும் தொழிற்சாலை கழிவு
ஸ்ரீபெரும்புதுார் --- சிங்பெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. போந்துார், வல்லம், வல்லக்கோட்டை, மாத்துார், சென்னக்குப்பம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமத்தினர், இந்த சாலையை பயன்படுத்தி, ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.வல்லம், வடகால், ஒரகடம் சிப்காட் பகுதிகளில் இயங்கிவரும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும், தொழிற்சாலை கழிவை, மர்ம நபர்கள் இரவு நேரங்களில் இந்த சாலையோரம் கொட்டுகின்றனர்.இதனால், சுற்றுச்சூழல் பதிப்பு ஏற்படுவதுடன், கழிவை மர்ம நபர்கள் எரிப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் தொழிற்சாலை கழிவு கொட்டுபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரா. கார்த்திக் ராஜா,ஸ்ரீபெரும்புதுார்.