உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / பயன்படுத்த முடியாத பயணியர் நிழற்குடை

பயன்படுத்த முடியாத பயணியர் நிழற்குடை

உத்திரமேரூர் அடுத்த, வெள்ளபுத்தூர் கிராமத்தில், கட்டியாம்பந்தல் செல்லும் சாலையில் பயணியர் நிழற்குடை உள்ளது. இந்த பேருந்து நிழற்குடையை பயன்படுத்தி, கிராம மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். தற்போது, பயணியர் நிழற்குடை முறையாக பராமரிப்பு இல்லாமல், கூரையின் சிமென்ட் ஷீட்டுகள் உடைந்த நிலையில் உள்ளன. இதனால், மழை மற்றும் வெயில் நேரங்களில் பயணியர் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, வெள்ளபுத்தூர் பயணியர் நிழற்குடையை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஆர். ராமகிருஷ்ணன், வெள்ளபுதூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை