உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி.....

எச்சரிக்கை பலகையைசூழ்ந்த புதர்கள்சோழவரம் அடுத்த காரனோடை ஆற்று மேம்பாலம் அருகே, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை மற்றும் காரனோடை பஜார் பகுதி செல்லும் சாலை சந்திக்கும் இடம் உள்ளது. இச்சாலை சந்திப்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், எச்சரிக்கை பலகையை முள்புதர் சூழ்ந்து மறைத்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் முன்கூட்டியே சாலை சந்திப்பு இருப்பதை அறிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர். எனவே, எச்சரிக்கை பலகையை சூழ்ந்துள்ள புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.முரளி, சோழவரம்.பூந்தமல்லியில்குதிரை தொல்லைபூந்தமல்லி நகராட்சியின் 21வது வார்டில், 80,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்நிலையில், இங்கு குடியிருப்பு பகுதியில் 20க்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றித் திரிகின்றன. குடியிருப்பு பகுதி, பள்ளி வளாகம், விளையாட்டு மைதானத்தில் சுற்றும் குதிரைகளால் மாணவர்கள், பொதுமக்கள் பீதியடைகின்றனர். நெடுஞ்சாலையில் சுற்றும் குதிரைகளால், அடிக்கடி சிறு சிறு விபத்துகள் ஏற்படுகின்றன. சாலையில் நடந்து செல்வோரையும் முட்ட வருகின்றன. சில நேரம், காலால் உதைப்பதால், பகுதிவாசிகள் காயமடைகின்றனர்.எனவே, பூந்தமல்லியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள குதிரைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சாந்தி கிருஷ்ணா, 35, பூந்தமல்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை