திருவள்ளூர்: புகார் பெட்டி ;குண்டும் குழியுமான நெடுஞ்சாலை
குண்டும் குழியுமான நெடுஞ்சாலை
திருத்தணி - பொதட்டூர்பேட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையில், அதிகாலை 4:00 மணி முதல், இரவு 11:00 மணி வரை வாகனங்கள் சென்றவாறு இருக்கும். இந்நிலையில், நெடுஞ்சாலையை முறையாக பராமரிக்காததால் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது.இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து காயமடைகின்றனர். குறிப்பாக தெக்களூர் ஏரிக்கரை சாலையில் ஆங்காங்கே சாலை சேதம் அடைந்துள்ளது.இதை சீரமைக்காமல், திருத்தணி நெடுஞ்சாலைத் துறையினர் இருப்பதால், தினமும் குறைந்தபட்சம் ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயத்துடன் செல்கின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டுகிறேன்.- ஆர். ராஜா,தெக்களூர்.