மேலும் செய்திகள்
வாசகர்களின் புகார்கள்
01-Nov-2026
வீணாகும் தண்ணீர் திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், ராஜகணபதி கோவில் முன்புறம் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. – செல்வராஜ், தென்னம்பாளையம். (படம் உண்டு) திருப்பூர், பாளையக்காடு, சேர்மன் கந்தசாமி நகர் ஸ்கூல் வீதியில் குழாய் உடைந்து ஒரு மாதமாக தண்ணீர் வீணாாகிறது. – சின்னமருது, சேர்மன்கந்தசாமிநகர். (படம் உண்டு) கும்மிருட்டில் சாலை வளம் பாலம் துவங்கி மணியகாரம்பாளையம் வரை நொய்யல் சாலையில் விளக்குகள் எதுவும் எரிவதில்லை. – அண்ணாதுரை, மணியாகரம்பாளையம். (படம் உண்டு) திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி. மில் ஸ்டாப்பில் இருந்து மண்ணரை வரை தெருவிளக்குகள் எரிவதில்லை. – விஸ்வேஸ்வரன், மண்ணரை. (படம் உண்டு) போலீசார் கவனத்துக்கு... திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன் சிக்னல் வேலை செய்வதில்லை. – வித்யசாகர், பெரிச்சிபாளையம். (படம் உண்டு) கொசுத்தொல்லை திருப்பூர் மாநகராட்சி வெள்ளி பூங்காவில் தேங்கும் மழைநீரை அவ்வப்போது வெளியேற்றி துாய்மைப்படுத்த வேண்டும். – தங்கராஜ், பார்க்ரோடு. (படம் உண்டு) ஊத்துக்குளி – காங்கயம் மெயின் ரோட்டில் கால்வாய் சுற்றிலும் முட்புதர் நிறைந்துள்ளதால், கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. – ரமேஷ், ஊத்துக்குளி. (படம் உண்டு)
01-Nov-2026