உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருப்பூர் / சாலையில் தொல்லை...

சாலையில் தொல்லை...

தெருவிளக்கு எரியவில்லை திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கருமாரம்பாளையம் நேதாஜி நகரில் இரவு நேரங்களில் தெருவிளக்கு எரிவதில்லை. மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். - ஞானம், கருமாரம்பாளையம். நடைபாதையில் ஜல்லி கற்கள் திருப்பூர் மாநகராட்சி வெள்ளி விழா பூங்கா நடைபாதையில் ஜல்லி கற்கள் சிதறி கிடக்கிறது. நடைபாதையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. - வின்சென்ட், ராயபுரம். மூடப்படாமல் உள்ள குழி திருப்பூர் தோட்டத்துப்பாளையம் மெயின் ரோட்டில் தோண்டப்பட்ட குழி மூடப்படாமல், பேரிகார்டு தடுப்பை மட்டும் வைத்துள்ளனர். விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. - விஜி, திருப்பூர். ஊர் பெயரில் குழப்பம் புதிய பஸ்களில் வழித்தடம் குறித்து, ஊர்களின் பெயர்கள் சரியாக இடம் பெறுவதில்லை. இதனால், பொதுமக்கள் குழப்பத்தை சந்தித்து வருகின்றனர். - ராஜேஸ்வரி, போயம்பாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை