உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / 242 இடங்களில் 8 பேர் கூட தேறாத இடஒதுக்கீடு!

242 இடங்களில் 8 பேர் கூட தேறாத இடஒதுக்கீடு!

ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''பதில் நோட்டீஸ் குடுத்துட்டாரு பா...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''யாருக்கு ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''அதாவது, சசிகலா கால்ல அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுந்தார்னு, 'மாஜி' அமைச்சர் பொன்னையன் சொன்னதா, அ.தி.மு.க., ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளரான பெங்களூரு புகழேந்தி சமீபத்துல பேசியிருந்தாரு... ''இதனால கடுப்பான சண்முகம் தரப்பு, புகழேந்திக்கு அவதுாறு வழக்கு நோட்டீஸ் அனுப்பிடுச்சு பா...''புகழேந்தியும், தன் வக்கீல் மூலமா சண்முகத்துக்கு பதில் நோட்டீஸ் அனுப்பியிருக்காரு... அதுல, 'சசிகலா காலில் சண்முகம் விழுந்ததற்கு ஆதாரம் இருக்கு... ''இது சம்பந்தமா, கன்னியாகுமரி அ.தி.மு.க., நிர்வாகி கோலப்பனிடம் பொன்னையன் பேசிய ஆடியோ பதிவுகள் ஊடகங்கள்ல வெளியானது... அதனால, சண்முகம் நோட்டீசை வாபஸ் பெறணும்... ''இல்லன்னா, நானும் சட்டப்படி சந்திக்கிறேன்'னு பதிலடி குடுத்திருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.''தொகுதிக்கு தொடர்பு இல்லாதவருக்கு பதவியான்னு குமுறிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''எந்த கட்சியிலங்க...'' என விசாரித்தார், அந்தோணிசாமி.''தி.மு.க.,வில், சமீபத்துல சில புதிய மாவட்டங்களை உருவாக்கி, பொறுப்பாளர்களை போட்டாளோல்லியோ... இதுல உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி, திருப்பூர் தெற்கு மாவட்டத்தை உருவாக்கி, இதன் பொறுப்பாளரா பத்மநாபன்னு ஒருத்தரை நியமிச்சிருக்கா ஓய்...''இவர், தாராபுரம் தொகுதியை சேர்ந்தவர்... திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலராகி, இப்ப மண்டலக் குழு தலைவராகவும் இருக்கார் ஓய்...''இதனால, 'நம்ம உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில மாவட்ட பொறுப்பாளருக்கு ஒருத்தர் கூட தேறலையா... தாராபுரம் தொகுதியில் இருந்து இறக்குமதி பண்ணியிருக்காளே'ன்னு உடன்பிறப்புகள் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''முன்னேறிய சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு எட்டாக்கனியாவே இருக்கு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''நகராட்சி நிர்வாகத் துறை சார்புல, 781 உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடந்துச்சு... அடுத்து, 'ரேங்க் லிஸ்ட்' வெளியாகி, கவுன்சிலிங் நடத்தி, மூணே நாள்ல பொது பட்டியல்ல இருந்த காலியிடங்களை நிரப்பிட்டாவ வே...''இதுல, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவுகளை சேர்ந்தவங்களே நிறைய பேர் தேர்வாகியிருக்காவ... அதே சமயம் பிராமணர், முதலியார், பிள்ளை போன்ற 10க்கும் மேற்பட்ட முன்னேறிய சமூகங்களை சேர்ந்தவங்கள்ல எட்டு பேர் கூட தேர்வாகல வே...''அதாவது, 'மொத்த பணியிடங்கள்ல, 1 சதவீதம் கூட முன்னேறிய சமூகத்துக்கு கிடைக்கல... தமிழகத்தில் அமல்ல இருக்கிற, 69 சதவீத இடஒதுக்கீடு போக, மீதியுள்ள 31 சதவீத இடங்கள்னு கணக்கு போட்டு பார்த்தாலும், 242 இடங்கள்ல முன்னேறிய சமூகத்தினர் தேர்வாகி இருக்கணும்... ''ஆனா, வெறும் எட்டு பேர் கூட தேர்வாகலைன்னா இது என்ன சமூக நீதி'ன்னு இந்த சமூகத்தினர் புலம்புதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.''எல்லாருக்கும் எல்லாம்னு அடிக்கடி சொல்ற நம்ம முதல்வர்தான் இதுக்கு பதில் தரணும் பா...'' என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ray
மார் 14, 2025 07:50

பிராமணர், முதலியார், போன்ற முன்னேறிய சமூகங்களை சேர்ந்தவங்கள்ல எட்டு பேர் கூட தேர்வாகல. இவங்க மெரிட்ன்னு எதை சொல்றாங்கன்னு தெரியலை. அதனால என்ன பிஜேபி மத்திய அரசுதான் இவங்களை போன்ற ஒழிசல்களுக்கு உதவுவதற்காகவே EWS னு ஒரு கோட்டா கொண்டுவந்து ஏராளமான போஸ்டிங் போட்டிருக்காங்களே தெரியாதா? அந்த பப்பு இங்க வேகாதுல்ல அதான் காண்டு.


Gopal Krishnan
மார் 13, 2025 18:31

உண்மையின் உரைகல் உண்மையை மட்டும் சொல்லாத


Gopal Krishnan
மார் 13, 2025 18:30

கமெண்ட எங்கே


R.RAMACHANDRAN
மார் 13, 2025 17:28

இட ஒதுக்கீடு ஒழிய வேண்டும் எனில் தாழ்த்தப்பட்டவர்களை கிராமங்களில் தனிமைப்படுத்தி கொடுமை படுத்துவதை நிறுத்தி அவர்களும் மனிதர்கள் தான் அவர்களுக்குள்ளேயும் தெய்வம் உள்ளது என்ற உண்மையை உணர்ந்து சமமாக நடத்த வேண்டும்.அரசு பணிகளில் உள்ள மேல் சாதியினரும் லஞ்சம் இல்லையேல் சேவை இல்லை என்ற கொள்கையை கடை பிடிக்கின்றனர்.அதனால் இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் இந்தியா முன்னேரி விடும் என்பது வஞ்சகமான பிரச்சாரம். இந்த நாட்டின் தலை மேல் தாழ்த்தப்பட்டவரின் சாபம் என்கின்ற கத்தி தொங்குகிறது,அவர்கள் தாகத்தால் தவித்த பொது நல்ல ஆற்று நீர் இருக்கும் போது சாக்கடை நீரை அளித்தீர்கள்,பெரும் செல்வ குவியலுக்கு மத்தியில் அவர்களை பட்டினி போட்டு பணிய வைத்தீர்கள்,அத்வைதம் என்பதை உதட்டளவில் சொல்லிக் கொண்டு மனத்தளவில் அவர்களை வெறுத்தீர்கள்,இந்த அவமானத்தை துடைப்பீர்களாக என உண்மையான ஞானி விவேகானந்தர் சொன்ன உண்மையை மனதில் கொண்டு மக்கள் மாற வேண்டும்.


Ray
மார் 14, 2025 12:32

இந்த வலைத்தளத்தில் இப்படியொரு வித்தியாசமான கருத்து பாராட்டுக்கள் ராமச்சந்திரன். பண்டைய காலங்களில் என்ன நடந்தது என்று பார்ப்பதைவிட இன்றைய நிலை என்ன வென்று பார்ப்போமே. இங்கே எங்கே வந்தது அத்வைதம்? த்வைதம் - இரண்டு என்பதை சொல்வதால், அத்வைதம் இரண்டல்ல இரண்டல்ல, நாமே அவன் எல்லாம் ஒன்று என்ற கூற்று மற்றும் சித்தாந்தம். தாழ்த்தப்பட்டவர்களை கிராமங்களில் தனிமைப்படுத்தி கொடுமை படுத்துவது யாருன்னு பாருங்க. கோவில்களில் தடுப்பது யார்? நாங்கதான் கோவில் தேர், திருவிழா நடத்துவோம்னும் கோர்ட்டுக்கு போவது யார்? நீர்த்தொட்டியில் நரகலைக் கலப்பதால் அரசுக்குத்தான் கெட்ட பெயரா? ஊர்க்காரர்களுக்கில்லையா? தொன்மையான நாகரீகம்னு சொல்லிக்கொள்ளும் தமிழ் சமூகத்துக்கு இல்லையா? சாதி சண்டை மாணவர் நிலையிலேயே வெட்டு குத்துன்னு வந்துள்ளதே. ஒரு திருட்டு நடந்தாலும் ஏண்டா இது என்ன ஊரா இல்ல சேரியான்னு கேட்டாங்களே. சேரிகளெல்லாம் முன்னேறி இந்த வரும் காலத்தில் ஊர்களெல்லாம் சேரிகளாகிறது கொடுமைதான். ஒரு இளைய ராஜா உலகப் புகழ் பெற்றது கொட்டாவால் இல்லை. திருந்த வேண்டியது MBC க்களாகிய "மிகவும் பின் தங்கியவர்"களாகவே தொடர்பவர்கள்தான் அல்லவா?


RAVINDRAN.G
மார் 13, 2025 15:10

தமிழ்நாட்டில் சமூக அநீதிதான் நடக்கிறது . கட்சிக்காரன் காசு கொடுக்கிறவன் அடிப்படை அறிவு இல்லாதவன் வேலையே என்னனு தெரியாதவன் இவர்கள்தான் தமிழ்நாட்டுக்கு லாயக்கு. படித்தவர்கள் எல்லாம் வேறு மொழி கற்று வெளிமாநிலம் அல்லது வெளிநாடு சென்று விடுவார்கள். இந்த பதர்களை வைத்து என்ன வேலை செய்து நாட்டை முன்னேற்றபோறாங்க? ஆண்டவனுக்கே வெளிச்சம். உதாரணம் ஆசிரியர் வேலை ஒருகாலத்தில் மிகவும் போற்றுதற்குரிய உத்தியோகமாய் இருந்தது. அப்போதெல்லாம் சொற்ப சம்பளம்தான் கொடுப்பார்கள். அதற்கு தகுதியான முன்னேறிய வகுப்பினர் ஒழுக்கத்தை கற்பித்து கண்டிப்புடன் நடந்து பாடம் சொல்லிக்கொடுப்பார்கள். இப்போது ஆசிரியர் பணிக்கு நிறைய சம்பளம் தகுதி இல்லாதவர்கள் தரக்குறைவாக பாலியல் சில்மிஷம் செய்து ஆசிரியர் பணிக்கே அவமானம் ஏற்படுத்துகிறார்கள். அதனால் மாணவர்கள் கெட்ட வழியில் செல்கின்றனர் ஏன் மாணவிகள் கூட மது அருந்தும் காட்சியை பார்க்கிறோம். எப்போ இடஓதுக்கீடு ஒழிகின்றதோ அப்போதுதான் நாடு உருப்படும்.


sribalajitraders
மார் 13, 2025 09:23

தகுதி இல்லாதவர்களை எப்படி எடூப்பர்


D.Ambujavalli
மார் 13, 2025 07:12

எப்படியாவது ஏனைய சமூகத்தினரின் காலை வார வேண்டும் என்று பழி தீர்க்கும் இவர்களால்தான் மேல்நாடு சென்று சம்பாதிக்கலாம் என்று கிளம்பிவிடுகிறார்கள் தகுதி இருக்கோ இல்லையோ, இந்த recruit கல் செய்யும் குளறுபடிக்கு அளவு இல்லை


கிஜன்
மார் 13, 2025 03:39

முதலியார்வாள் அமைச்சர் PTR .... மற்றும் செட்டியார்வாள் பசி .. இந்த ஆட்சியை விழுந்து விழுந்து ஆதரிக்கின்றனரே .... அவர்கள் சொந்தத்தில் கூடவா ஒருவரும் தேறவில்லை ? 242 பேரில் 8 பேர் தான் தேர்வாகி உள்ளனர் என்றால் ...நிச்சயமாக சமூக அநீதி தான் ...


புதிய வீடியோ