| ADDED : ஜூன் 28, 2024 09:59 PM
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை: அரசியலமைப்பு
சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி தான் இந்திரா நெருக்கடி நிலையை
அறிவித்தார். நெருக்கடி நிலை முடிந்ததும், அன்றைய பிரதமர் இந்திரா நடத்திய
தேர்தலில், அவரே வெற்றி வாய்ப்பை இழந்ததன் வாயிலாக, ஜனநாயகத்தை உலகத்திற்கு
நிரூபித்தார். நேற்று பெய்த மழையில், இன்று முளைத்த காளான் அண்ணாமலை இதை
அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. போர் போன்ற நேரங்களில் நெருக்கடி
நிலையை அமல்படுத்தலாம் தான்... ஆனா, 'பிரதமர் இந்திரா தேர்தலில் வெற்றி
பெற்றது செல்லாது' என்ற கோர்ட் தீர்ப்பால, தன் பதவி பறிபோயிடுமோன்னு
பயந்துதானே நெருக்கடி நிலையை அமல்படுத்தினாரு!தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை: வாரிசு என்பதால் மட்டுமே தலைமை பதவிக்கு வரும் நேரு குடும்பத்தினரை விட, ஐந்து கட்சிகளில் மாறி மாறி செல்வப்பெருந்தகை பயணம் செய்துள்ளார். அவரது கடின உழைப்பால், ஒவ்வொரு கட்சியிலும் சிறப்பாக பணியாற்றி, தமிழக காங்கிரஸ் தலைவராக உயர்ந்திருக்கும் செல்வப்பெருந்தகை தான் எனக்கு பெருமைக்குரியவராக தெரிகிறார்.இதை தான், வஞ்ச புகழ்ச்சி என்று சொல்வாங்களோ?காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேச்சு: ஒருவரை ஒருவர் அடக்க வேண்டும் என்பது தான் சமுதாய அமைப்பு. இன்று வரை அந்த சமுதாய அமைப்பு தான் இருக்கிறது. கிராமங்களில், சிறிய நகரங்களில், இன்றளவும் ஜாதி தீண்டாமை போன்ற கொடுமைகள் இருக்கின்றன. ஜாதி, தீண்டாமை இருக்கும் வரை முழு சுதந்திரம் பெற்ற இந்தியாவாக ஏற்றுக்கொள்ள முடியாது.நம்ம நாட்டை 50 வருஷத்துக்கும் மேலா ஆட்சி செய்த இவரது கட்சி, ஜாதி தீண்டாமையை ஒழிக்க எதுவுமே செய்யலை என்பது இதுல இருந்தே தெரியுது!தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு பேட்டி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனையை தமிழக அரசு தடுக்க தவறி விட்டது. சம்பவம் நடந்த இடத்தில் தான், நீதித் துறை, காவல் துறை அலுவலகங்கள், நீதிபதிகள் குடியிருப்புகள் உள்ளன. கள்ளச்சாராய விற்பனை எப்படி இவர்களின் கண்களில் படவில்லை. இங்குள்ள போலீசார் உள்ளிட்ட அதிகாரிகளின் அலட்சியத்தால் கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட்டுள்ளன. அதிகாரிகளின் பொறுப்பற்ற நிலை தான் இந்த சம்பவத்திற்கு காரணம். இங்க எல்லாம் போலீசார் தொந்தரவு இருக்காது என்பது, கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு நன்கு தெரியும் போல!