உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ஊருக்கே வீட்டு வரி கட்டிய பஞ்., விசாரிக்க ஊர்மக்கள் கோரிக்கை

ஊருக்கே வீட்டு வரி கட்டிய பஞ்., விசாரிக்க ஊர்மக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை:ஆவுடையார்கோவில் அருகே ஓக்கூர் ஊராட்சியில், ஊருக்கே வீட்டுவரி கட்டிய ஊராட்சி நிர்வாகம் மீது விசாரணை செய்ய கோரி, மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே ஓக்கூர் ஊராட்சியில், 750 வீடுகள் உள்ளன; 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இந்நிலையில், மாதத்தின் முதல் வாரத்தில் ஊராட்சியைச் சேர்ந்த 500 வீடுகளுக்கு வீட்டுவரி, குடிநீர் வரி ஊராட்சி நிர்வாகத்தால், ஆன்லைன் மூலம் செலுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எஸ்.எம்.எஸ்., அவரவர் மொபைல் போனுக்கு வந்தது.அதை பார்த்த குடியிருப்புவாசிகள் இன்னும் வரி கட்டாத நிலையில், பணம் செலுத்தியதாக எஸ்.எம்.எஸ்., வந்துள்ளதே என்று அதிர்ச்சியடைந்தனர்.இதையடுத்து, இந்த கிராமத்தைச் சேர்ந்த முஜிபுர் ரகுமான் என்பவர், கிராம மக்கள் சார்பில் கலெக்டர், தாசில்தார், ஊராட்சிகள் உதவி இயக்குநர் ஆகியோருக்கு விசாரிக்க புகார் மனு அனுப்பியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை