உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / தொகுதிக்கு துண்டு போடும் அ.தி.மு.க., நிர்வாகிகள்!

தொகுதிக்கு துண்டு போடும் அ.தி.மு.க., நிர்வாகிகள்!

பெஞ்சில் அமர்ந்ததுமே, ''ஆன்லைன் ஏலத்தை தடுத்து நிறுத்திட்டாரு வே...'' என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''கோவை மாவட்டம், பேரூர் பட்டீஸ்வரர் கோவில்ல, பிரசாத கடைகள் வைக்கிறதுக்கான ஏலத்தை, 'ஆன்லைன்'ல நடத்த அறநிலையத் துறையினர் முடிவு செஞ்சாவ... ஆனா, ஆன்லைன்ல ஏலம் விட்டா, தனக்கு கடை கிடைக்காதுன்னு உள்ளூர் தி.மு.க., நிர்வாகி ஒருத்தர், கட்சியின் வடக்கு மாவட்ட புள்ளியிடம் முறையிட்டிருக்காரு வே...''அவரும், 'ஆன்லைன் ஏலம் எல்லாம் வேண்டாம்... மேலிடத்துல பேசி, நேரடி ஏலம் நடத்த ஒப்புதல் வாங்குதேன்... அப்புறமா, தி.மு.க., நிர்வாகிக்கே குடுத்துடுவோம்'னு அதிகாரிகளிடம் பேசி, ஆன்லைன் ஏலத்தை நிறுத்திட்டாரு வே...'' என்றார், அண்ணாச்சி.''தள்ளி உட்காருங்க ரவி...'' என்ற அந்தோணிசாமியே, ''மாறி மாறி புகார் குடுத்து, கோஷ்டிப்பூசலை அம்பலப்படுத்திட்டாங்க...'' என்றபடியே தொடர்ந்தார்...''துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் பகுதியில் ஐம்பொன் சிலை கடத்தியதா, நாலு பேரை சமீபத்தில் போலீசார் கைது செஞ்சாங்க... அதுல ஒருத்தர் தி.மு.க., இளைஞரணி நிர்வாகி என்பதால், 'சிலை கடத்தலில் தி.மு.க., - எம்.எல்.ஏ., சண்முகையாவிற்கும், அவரது சகோதரர் முருகேசனுக்கும் தொடர்பு இருக்கு'ன்னு சமூக வலைதளங்கள்ல தகவல்கள் பரவுச்சுங்க...''அதிர்ச்சியான எம்.எல்.ஏ., மாவட்ட செயலரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை பார்த்து, 'எனக்கு எதிரா நம்ம கட்சியினரே அவதுாறு பரப்புறாங்க'ன்னு புலம்பியிருக்காரு... அனிதாவும், 'உங்களிடம் ஆதாரம் இருந்தா, போலீஸ்ல புகார் குடுங்க'ன்னு சொல்லிட்டாருங்க...''உடனே, எம்.எல்.ஏ., தரப்பும், எஸ்.பி., ஆபீஸ்ல புகார் குடுத்திருக்கு... அதுல, ஓட்டப்பிடாரம் பஞ்., முன்னாள் தலைவரும், தி.மு.க., ஒன்றிய செயலருமான இளையராஜா பெயரை குறிப்பிட்டிருக்காங்க...''பதிலடியா, எம்.எல்.ஏ., மீது இளையராஜா தரப்பினரும் புகார் குடுத்திருக்காங்க... 'இப்படி மாறி மாறி புகார் குடுத்து, கோஷ்டிப்பூசலை வெளிச்சம் போடுறாங்களே'ன்னு கட்சி தொண்டர்கள் கவலைப்படுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''தொகுதிக்கு இப்பவே துண்டு போடறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நின்னு ஜெயித்த தொகுதி... இந்த தொகுதிக்கு, அ.தி.மு.க.,வுல கடும்போட்டி நிலவறது ஓய்...''மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி, முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் கொறடா மனோகரன் ஆகிய மூணு பேரும் இப்பவே காய் நகர்த்திண்டு இருக்கா...''இதுக்காக, கட்சி பொதுச்செயலர் பழனிசாமியின் நண்பரான, சேலம் இளங்கோவனை அடிக்கடி போய் பார்த்து, 'எங்களுக்கே ஸ்ரீரங்கத்துல, 'சீட்' தரணும்'னு கேட்டுண்டு வரா... அதே நேரம், ஆளுங்கட்சி பணத்தை தண்ணியா இறைக்கும் என்பதால, 'அதிகமா பணம் செலவழிக்கிறவருக்கே சீட்'னு மேலிடம் உறுதியா இருக்காம் ஓய்...''பண விஷயத்துல, மற்ற இருவரை விடவும், பரஞ்ஜோதி பின்தங்கியிருக்கார்... இருந்தாலும், 'கடைசி வரை போராடி பார்த்துடணும்'கற எண்ணத்துல இருக்கார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

SRIDHAAR.R
மே 21, 2025 07:19

மக்களை சந்தித்து அவர்களுடைய நீண்ட நாள் பிரச்சனை தீர்க்கக்கூடிய கட்சிக்கே தொகுதி மக்கள் ச ம க பதவின் வாய்ப்பை வழங்குவர்


D.Ambujavalli
மே 21, 2025 03:41

இப்படி, ‘செலவு தொகை’ அடிப்படையில் சீட் வாங்கியவர் வெற்றி அடைந்தால் அதைப்போல பத்துமடங்காவது சேர்க்க மாட்டாரா? ‘சீட்டுக்கு நீ வாங்கினாய், சீட்ட்டில் அமர்ந்து நான் வாங்கினேன், ‘ என்று கேப்பார் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?


Anantharaman Srinivasan
மே 21, 2025 15:11

MAL செலவு செய்த தொகையை, ஜெயித்த பின் பத்து மடங்கு எடுப்பது காலங்காலமாக நடந்து வருகிறது. இதென்ன புதிய கண்டு பிடிப்பா..?


முக்கிய வீடியோ