உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  ஜன.15க்குள் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பரிசோதிக்க முடிவு அரசியல் கட்சி ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தகவல்

 ஜன.15க்குள் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பரிசோதிக்க முடிவு அரசியல் கட்சி ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தகவல்

தேனி: ஜன.15க்குள் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பரிசோதிக்கும் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளதாக கலெக்டர் ரஞ்ஜீத்சிங் அரசியல் கட்சி ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார். அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் டிச., 11 முதல் சோதனை செய்யப்பட உள்ளன. இச்சோதனை குறித்து கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் அரசியல் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜகுமார், பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன் முன்னிலை வகித்தார். உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., செய்யது முகமது, தாசில்தார்கள் பங்கேற்றனர். சந்தேகம் ஏற்பட்டால் அங்கேயே விளக்கம் கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: மாவட்டத்தில் தற்போது 1394 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் கன்ட்ரோல் யூனிட் 1870, இதற்கான பேட்டரிகள் 400, பேலட் யூனிட் 3013, வி.வி.பேட் 1970. வி.வி.,பேட் பேட்டரிகள் 3850, பேப்பர் ரோல் 1500 உள்ளன. கூடுதலாக இயந்திரங்கள் உள்ளன. பெல் பொறியாளர்கள் மூலம் டிச.,11 காலை 9:00 மணி முதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சோதனை செய்யும் பணிகள் துவங்குகிறது. இயந்திரங்கள் சோதனை தினமும் இரவு 7:00 மணி வரை நடைபெறும். பொங்கல் பண்டிகைக்கு முன் இப்பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். ஆய்வு நடைபெறும் பகுதியில் அலைபேசி எடுத்து செல்ல அனுமதி இல்லை. கட்சியினர் வருகை பதிவேட்டில் கையொப்பம் இட வேண்டும். தேர்தல் ஆணையத்தில் இருந்தும் ஆய்விற்கு வருவார்கள். ஆய்வில் மாதிரி ஓட்டுப்பதிவு செய்து பார்க்கலாம். சந்தேகம் இருந்தால் அங்கேயே விளக்கம் அளிக்கப்படும் என்றார். அடையாள அட்டை வழங்க வேண்டும் சிவாஜி, ஆம் ஆத்மி கட்சி: நோட்டா சின்னம் தமிழில் இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். கோபி நாத், காங்., நகர செயலாளர், வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூ மாநில குழு உறுப்பினர்: கடந்த ஆண்டுகளில் இந்த ஆய்விற்கு செல்லும் அரசியல் கட்சியினருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்தாண்டும் வழங்க வேண்டும் என்றனர். முருகராஜா, தே.மு.தி.க., நகர செயாளர்: தேனி நகர்பகுதியில் 2025 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற சிலருக்கு எஸ்.ஐ.ஆர்., படிவம் வழங்கவில்லை. இதைப்பற்றி அதிகாரி களிடம் கேட்டால் உரிய பதில் இல்லை. கலெக்டர்: ஆன்லைன் மூலம் படிவம் பூர்த்தி செய்து வழங்கலாம். அல்லது படிவம் 6 வழங்கி பெயர் சேர்த்து கொள்ளலாம். கூட்டத்தில் அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் பாண்டியராஜன், சதீஸ்குமார், தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ஆசைதம்பி, ஐ.டி., பிரிவு தலைவர் ராஜா, பா.ஜ., நிர்வாகி தேவகுமார், தேசிய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கலைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை