மேலும் செய்திகள்
கூட்டமாக திரியும் நாய்களால் மக்கள் அச்சம்
24-Sep-2025
பூந்தமல்லி: பூந்தமல்லி ஒன்றியத்தில், காட்டுப்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, டி.ஆர்.ஆர்., நகர், கோபரசநல்லுார், செந்துார்புரம், காட்டுப்பாக்கம், விநாயகபுரம், மேக் நகர், ராயல் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 20,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அனைத்து தெருக்களிலும், நாய்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில், 15க்கும் மேற்பட்டோரை நாய்கள் கடித்துள்ளது. இதனால், மக்கள் வெளியே செல்லவும், குழந்தைகளை விளையாட அனுப்பவும் அச்சப்படுகின்றனர். காட்டுப்பாக்கம் ஊராட்சியில் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
24-Sep-2025