உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / சாலை நடுவே மின் கம்பம் ஊரப்பாக்கத்தில் விபத்து அபாயம்

சாலை நடுவே மின் கம்பம் ஊரப்பாக்கத்தில் விபத்து அபாயம்

ஊரப்பாக்கம், ஊரப்பாக்கத்தில், சாலை நடுவே உள்ள மின்கம்பத்தால் தினமும் விபத்துகள் நடப்பதால், மின் கம்பத்தை அகற்றி சாலையோரம் நட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி, 8வது வார்டுக்கு உட்பட்ட ராம் நகர், ஆரோக்கிய அன்னை மருத்துவமனை எதிரில், செந்தமிழ் சாலையின் நடுவே, 15 ஆண்டுகளுக்கும் மேலாக பழைய மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பத்தால், தினமும் விபத்துகள் நடக்கின்றன. இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மோதி, படுகாயம் அடைவது தொடர்கிறது. போக்குவரத்திற்கு இடையூறாக மட்டுமின்றி, அடிக்கடி விபத்துகளையும் ஏற்படுத்தி வரும் இந்த மின் கம்பத்தை அகற்றி, சாலையோரம் நட வேண்டும் என, இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் மின்வாரியம், ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்டவை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து, அனைத்து தரப்பினருக்கும் இடையூறாக உள்ள இந்த மின்கம்பத்தை அகற்றி, சாலையோரம் நட வேண்டும் என, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை