உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / சிறுமிக்கு பாலியல் தொல்லை கராத்தே பெண் மாஸ்டருக்கு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கராத்தே பெண் மாஸ்டருக்கு சிறை

சென்னை, சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த, பெண் கராத்தே பயிற்சியாளருக்கு, 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையை சேர்ந்த தம்பதியின், 16 வயதான பெண் குழந்தை, பெரவள்ளூரில் உள்ள பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 2024 அக்., 17ல் பள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதுகுறி த்து, பெரவள்ளூர் மகளிர் போலீசார் விசாரித்தனர். சம்பவம் நடந்த நாளில், சிறுமி பள்ளிக்கு செல்லாததும், பள்ளியில் பணிபுரிந்த 27 வயதான பெண் கராத்தே பயிற்சியாளர் கடத்திச்சென்று, பாலியல் தொல்லை அளித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, கடந்த மார்ச், 18ல் பெண் கராத்தே பயிற்சியாளர் ஜெயசுதா பாலகிருஷ்ணன் என்பவரை, போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.பத்மா, பெண் கராத்தே பயிற்சியாளர் மீதான குற்றச்சாட்டு, அரசு தரப்பால் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, அவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என, தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 1.50 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை