மேலும் செய்திகள்
கஞ்சா வழக்கில் ஜாமின் தப்பி ஓடிய நபர் கைது
07-May-2025
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் பகுதியில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நிதிமன்றத்தில் ஆஜராகாமல் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் இந்திராநகரை சேர்ந்தவர் ஜாபர்சாதிக் 50. வேடசந்துாரில் 2005ல் ஆட்டோ டிரைவாக இருந்தார். அப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திண்டுக்கல்லுக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். ஜாபர்சாதிக்கை திண்டுக்கல் வடக்கு போலீசார் கைது செய்தனர். ஓரிரு மாதங்களில் ஜாமினில் வந்த அவர் தலைமறைவானார். ஜாபர்சாதிக்கை ஆஜர்படுத்த நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து வடக்கு இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையிலான தனிப்படை போலீசார் , திருப்பூர் இந்திராநகரில் மறைந்திருந்த அவரை கைது செய்தனர். திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
07-May-2025