வி.சி., கோரிக்கைகளை கண்டு கொள்ளாத அமைச்சர்கள்!
“பத்திரிகையாளர்களைஉள்ளயே விடப்டாதுன்னு,'ஸ்ட்ரிக்ட் ஆர்டர்' போட்டிருக்கா ஓய்...” என்றபடியே வந்தார், குப்பண்ணா.“எந்த ஆபீஸ்ல வே...”என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.“திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் தான்,இப்படி ஒரு உத்தரவை எல்லா தலைமை ஆசிரியர்களுக்கும் போட்டிருக்கா... 'இதை மீறி பத்திரிகையாளர்கள்யாராவது பள்ளிக்குள்ள வந்தா, தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'னும் வாய்மொழி எச்சரிக்கை விடுத்திருக்காஓய்...“பள்ளியில மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில நடக்கற பிரச்னைகள்,பழுதான கட்டடங்கள் சம்பந்தமா அடிக்கடி செய்திகள் வர்றதால தான்,இப்படி ஒரு கறார் உத்தரவை போட்டிருக்கா... “இதனால, அரசு பள்ளிகள்ல நடக்கற நல்ல செயல்பாடுகளும் வெளியுலகுக்கு தெரியாம போறதுக்கு சான்ஸ் இருக்கு ஓய்...” என்றார், குப்பண்ணா.“நாங்க முந்திக்கிட்டோம்னு சொல்றாங்க பா...” என, அடுத்த தகவலுக்கு தாவிய அன்வர்பாயே தொடர்ந்தார்...“திண்டுக்கல் மாவட்டத்தில், 2022ல நடந்த நகர்புற உள்ளாட்சிதேர்தல்ல, சில இடங்கள்லகூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய பதவிகளை, பெரும்பான்மை பலத்தால தி.மு.க.,வினர்பிடிச்சுட்டாங்க... அப்புறம்மேலிடம் விடுத்த எச்சரிக்கையால, தி.மு.க.,வினர் ராஜினாமா பண்ணி,கூட்டணி கட்சிகளுக்கு பதவிகளை விட்டு குடுத்தாங்க பா...“சமீபத்துல, இந்த கூட்டணி தர்மத்தை தி.மு.க.,வினர் மீறிட்டாங்க... அதாவது, அய்யலுார் பேரூராட்சியில் இருந்த ஒரே ஒரு மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலர் முருகேஸ்வரியை, தங்களது கட்சியில சேர்த்துக்கிட்டாங்க பா...“இதனால, அதிருப்தியான மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள், 'என்னங்க இது'ன்னு கேட்டதுக்கு,'முருகேஸ்வரி, விஜய் கட்சி பக்கம் போக போறதா தகவல் கிடைச்சுது... அதான், நாங்க முந்திக்கிட்டோம்'னு தி.மு.க.,வினர் பதில் தந்திருக்காங்க... “இதனால, 'ஆப்பரேஷன் விஜய் என்ற பெயர்ல, கூட்டணி கட்சியினரை இழுத்து போடுறாங்களோ'ன்னு தி.மு.க.,வினர் மேல காம்ரேட்கள் சந்தேகப்படுறாங்க பா...”என்றார், அன்வர்பாய்.“எந்த கோரிக்கையையும் கண்டுக்க மாட்டேங்கிறாங்க...” என, கடைசிதகவலுக்கு கட்டியம் கூறினார் அந்தோணிசாமி.“யாரு, என்னன்னு விளக்கமா சொல்லும் ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.“ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்கிற காங்கிரஸ்,'ஆட்சியில பங்கு வேணும்'னு கோஷம் எழுப்பியதும், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கைகள் எல்லாம் உடனுக்குடன் நிறைவேறுதுங்க... ஆனா, இதே கோஷத்தை எழுப்பிய வி.சி., கட்சி எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கை மனுக்களை, அமைச்சர்கள் பலரும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேங்கிறாங்க...“இதனால, 'தலித் சமுதாய ஓட்டு வங்கியைபலமா வச்சிருக்கிற எங்களை, ஆளுங்கட்சியினர் மதிக்கவே மாட்டேங்கிறாங்க... அ.தி.மு.க., ஆட்சியில்,எதிர்க்கட்சியாக இருந்ததி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கைகளை கூட உடனுக்குடன் நிறைவேற்றி குடுத்தாங்க... “ஆனா, இந்தஆட்சியில் கூட்டணி கட்சியான எங்களையேஅமைச்சர்கள் புறக்கணிக்கிறாங்க'ன்னு வி.சி., - எம்.எல்.ஏ.,க்கள் புலம்புறாங்க...” என முடித்தார், அந்தோணிசாமி.அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.