உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / கல்வித்துறை மாவட்ட வாலிபால் மான்ட்போர்ட் பள்ளி முதலிடம்

கல்வித்துறை மாவட்ட வாலிபால் மான்ட்போர்ட் பள்ளி முதலிடம்

சென்னை, கல்வித்துறையின் வருவாய் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில், ஆலந்துார் மான்ட்போர்ட் பள்ளி முதலிடத்தை பிடித்து, மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாணவர்களுக்கான வருவாய் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி, தி.நகரில் நேற்று நடந்தது. இதில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான இறுதிப் போட்டியில், ஆலந்துார் மான்ட்போர்ட் பள்ளி மற்றும் முகப்பேர் வேலம்மாள் பள்ளி அணிகள் எதிர்கொண்டன. விறுவிறுப்பான ஆட்டத்தில், 25 - 12, 25 - 18 என்ற கணக்கில், ஆலந்துார் மான்ட்போர்ட் பள்ளி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. இந்த வெற்றியால், மாநில போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளது. மூன்றாம் இடத்தை, கலைமகள் பள்ளியும், கே.கே.நகர் ஸ்பிரிங் பீல்ட் பள்ளி நான்காம் இடத்தையும் கைப்பற்றின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை